வே. சுப்ரமணியன். கவிதைகள். சிறுகதைகள். கட்டுரைகள்
வே. சுப்ரமணியன் படைத்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் இணையதள அனுபவங்கள்
Navigation Menu
Showing posts with label
கவிதை
.
Show all posts
காதல் தோல்வி
நீ இரவு உணவு
சமைத்துக்கொண்டிருக்கும்போது
…
தேன்துளியும் நானும்!
ஒரு சொட்டு
தேன்துளிக்கு
பல்லாயிரம் மலர்களில்
அமர்ந்தெழுகின்றனவாம்
தேனீக்கள்!
நான்
மனிதனாக
பிறந்ததினால்..
உன் இரு இதழ்களில்
பல லட்சம்
தேன்துளிகள் பருகுகிறேன்.
வே.சுப்ரமணியன்.
மௌனம் எனும் சத்தம்!
உதடுகளால்
பேசப்பட்டால்
அது
மௌனமொழி கிடையாதாம்!
காற்றும் பேசக்கூடும்!
காற்றுக்கு
உருவம் கொடுத்தது..
தூரத்தில் நின்று
நீ கொடுத்த
முத்தம்.
காதல் காப்பீடும், அறிவுரையும்!
காதலிக்கும் போது
செலவழித்த பணத்தை
காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.
அறிவிப்பு பலகையுடன்
அறிமுகமானது
ஒரு
காப்பீட்டு நிறுவனம்!
தோற்காது
என்ற நம்பிக்கையில்
நிறுவனத்தை
சீண்டவில்லை எவரும்.
இது... மரணம் வேண்டும் நேரம்!
அப்படியே
நின்றுவிடக்கூடாதா
என் மூச்சு...!
என் சுவாசப்பையில்
உன் மூச்சுக்காற்று
நிறைந்து உள்ளபோது.
வே.சுப்ரமணியன்.
பதினான்கு வயதுடையவனின் கண்ணீர் கவிதை!
ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் ஆசையை
ஒன்பதாயிரம் சுக்காய்
உடைத்தெறிந்துவிட்டு
ஹோட்டலில் டேபிள் துடைக்கிறேன்,
குடும்பத்தின்
வறுமையை துடைக்க.
உணவருந்த வருவோரின்
கைகளில் பளபளத்தது
அழுமூஞ்சி ராக்காயி!
உன்
அழுமூஞ்சியைப்பார்க்கும்போதெல்லாம்
எனக்கு
இப்படித்தான் தோன்றும்.
அரசாங்க உத்தியோகம்!
அப்போதுதான்
முன்னேறிக்கொண்டிருக்கும்
ஒரு சமூகத்தின்
இளந்தம்பதிக்கு..
கொஞ்சம்
கூடுதலான இன்பம்தான்,
முரண்பாடுகள்!
நாய்கள் ஜாக்கிரதை!
வாசலில் தொங்கும் எச்சரிக்கை பலகை.
இங்கு..
நாய்கள் என்பது யார்?
ஒரே ஒரு மொழி கல்!
நட்சத்திரங்கள்
கீழே விழுந்து
சிதறிப்போய்விட்டால்...
இந்த எழுத்துக்கள்
எழுந்து வந்து
உன் கை பிடித்து
நடந்தால்...
அப்போதுதான்
கண் விழித்து
சோம்பல் முறிக்கும்
புல் மெத்தையிலிருந்து
பனித்துளி எழுந்து
சண்டைக்கு வந்தால்...
காவியமும் ஓவியமும்
உனது மானுட எல்லையை
உடைத்தெறிந்துவிட்டால்...
சிறைவாசி!
என் தேகங்களை
சிலிர்க்க வைக்கும்
மலர்களையும்!
என் பாதங்களை
பார்த்து ரசிக்கும்
புல்வெளிகளையும்!
Home
Older Posts
Subscribe to:
Posts (Atom)
தேடல்.
Popular Posts
அறிவை பகுத்து அறிவோம்!
பதினான்கு வயதுடையவனின் கண்ணீர் கவிதை!
எது காதல்?..
பொங்கல் திருநாளும், தை முதல் நாள் தமிழர் புத்தாண்டும்!
மகுடம் சூடும் பதிவர்கள்.
Tweets by @vstamilan
Copyright ©
Blogger Templates
| Designed By
Bthemez