காதலிக்கும் போது
காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.
அறிவிப்பு பலகையுடன்
அறிமுகமானது
ஒரு
காப்பீட்டு நிறுவனம்!
தோற்காது
என்ற நம்பிக்கையில்
நிறுவனத்தை
சீண்டவில்லை எவரும்.
இப்போது...
நிறுவனத்தின்
எலும்புக்கூடு உருவத்தை
மயக்கம் கலைந்த கண்கள்
ஏக்கத்துடன் பார்த்து செல்கின்றன!
அதிலிரு கண்களுக்கு
சொந்தக்காரனொருவன்,
உரைப்பாரின்றி கெட்டுப்போன
தன் நிலைமை
உரைப்பதற்கு புறப்பட்டான்!
மீண்டும்..
காதலிக்கும் போது
செலவழித்த பணத்தை
காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.
அறிவிப்பு பலகையுடன்
அறிமுகமானது
ஒரு
காப்பீட்டு நிறுவனம்!.
வே.சுப்ரமணியன்.
அந்த இரு கண்களுக்கு சொந்தகாரர் தாங்களோ??? tm
ReplyDeleteக்ளீன் போல்டாக போகிறேன் என்றுதான் நினைத்திருந்தேன்! ஆனால் தங்களின் முதல் பந்திலேயே....
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
அருமையான கவிதை. இப்படி ஒரு காப்பீடு இருந்தால்... நினைத்தாலே இனிக்கிறது.
ReplyDeleteபார்க்கலாம். எதிர்காலத்தில் நிச்சயம் வரும்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி!
காப்பீட்டு நிறுவனம் எங்கெங்கே இருக்கு...? ஹா..ஹா..
ReplyDeleteவிசாரித்துக்கொண்டிருக்கிறோம்! விரைவில் தகவல் வெளியிடப்படும்! அவ்வ்வ்வ்..!)))-
Deleteவித்தியாசமான சிந்தனை சுப்பிரமணியன்.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு .
எங்கே கானவில்லையே என்று நினைத்தேன்,காப்பீட்டு
நிறுவனம் ஆரம்பித்து விட்டீரோ.
அடிக்கடிபதிவுகள் இடவும் நண்பரே!
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே! விரைவில் தொடர்ச்சியான, முழுமையான வலைப்பதிவிடலை தொடர்கிறேன் நண்பரே! மிக்க நன்றி!
Deleteஅட்ரெஸ் ப்ளீஸ்...! :)
ReplyDeleteஉங்களுக்குக்கும் அதேதான்! "விசாரித்துக்கொண்டிருக்கிறோம்! விரைவில் தகவல் வெளியிடப்படும்!" அடடா! போற போக்க பாத்தா ஒரு நிறுவனத்த ஆரம்பிச்சுடலாமோ?..
Deleteஇன்சூரன்சு துறையில் ஒரு நாற்பது வருடம் பொறுப்பான பதவிகளில் இருந்த காரணத்தால்
ReplyDeleteஇந்த கவிதைக்கு எனக்கு நிர்ப்பந்தம் இருப்பதாக எனக்கு நானே கற்பனை செய்துகொண்டு
இதற்கான பதிலைத் தொடங்குவேன்.
காதல் கல்யாணத்தில் முடியாததைத் தோல்வி எனச் சொல்கிறீர்களா
அல்லது
காதல் கல்யாணத்தில் முடிவதைத் தோல்வி எனச் சொல்கிறீர்களா
என
இருவகை இருக்கிறது. . தெளிவாக ஆகவே பாலிசியில் தோல்வி என்றால் என்ன என்று குறிப்பிடவேண்டும்.
இரண்டாவது,
காதலில் ஏற்படுகின்ற செலவு ஐடங்கள் என்ன என்ன ? பில், ரசீது, எல்லாம் வைத்திருக்கவேண்டும்.
சுப்பு தாத்தா.
contd...
ReplyDeleteமூன்றாவது,
இந்தக் காலத்திலே இரண்டு ஸைடுலேயும் செலவு செய்வதால், ஒன்றுக்கொன்று அட்ஜெஸ்ட் ஆகிவிட வாய்ப்பு
இருக்கிறது. ஆகவே, நிகர நஷ்டத்திற்குத்தான் கம்பெனி பொறுப்பேற்கும் எனவும் ஒரு க்ளாஸ் கன்டிஷன் இருக்கவேண்டும்.
அடுத்தது,
காதலன், காதலி இருவருக்கும் ஒரே காம்பிரிஹென்ஸிவ் கவர் தந்தால் கொஞ்சம் டிஸ்கௌன்ட் தரவும் வாய்ப்பு இருக்கிறது./
கடைசியாக, போனஸ் க்ளாஸ். அதாவது நோ க்ளைம் டிஸ்கௌன்ட்.
இது ஒரு காதலில் தோத்துப்போய், இன்னொரு காதல், அடுத்தபடி இன்னொரு காதல் அதுபோல் செய்பவர்களுக்கு.
வருஷா வருஷம் மோடர், கார், வெஹிகில் இன்சூரன்ஸு போல.
சுப்பு தாத்தா.
contd.
ReplyDeleteகடைசியாக, போனஸ் க்ளாஸ். அதாவது நோ க்ளைம் டிஸ்கௌன்ட்.
இது ஒரு காதலில் தோத்துப்போய், இன்னொரு காதல், அடுத்தபடி இன்னொரு காதல் அதுபோல் செய்பவர்களுக்கு.
வருஷா வருஷம் மோடர், கார், வெஹிகில் இன்சூரன்ஸு போல.
ஒரு வருட முடிவில் நஷ்டம் ஏதேனும் இல்லாது, அடுத்த வருடம் ரெனுவல் செய்யவிரும்புவர்களுக்கு ஒரு குறைவுக்கட்டணம் தரலாம்.
அதெல்லாம் இருக்கட்டும்.
எனக்கு ஏதாவது கம்பெனியில் ஒரு எம்.டி. போஸ்ட் கிடைக்குமா ? நான் ஒரு ஆக்சுவரி.
சுப்பு தாத்தா.
முதலில் தங்களது வருகைக்கும், வாசிப்பிற்கும் நீண்ட நெடு பயனுள்ள கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteபொதுவாகவே, காப்பீடு என்பது "எதிர்பாராத இழப்புகளை சமாளிக்க" என்ற கருத்தைக்கொண்டது.("இழப்பை ஈடு செய்ய" என்ற பதத்தை கொண்டிருந்தாலும் அது நூறு சதம் முழுமையாக இழப்பை ஈடுகட்ட முடியாததால் "சமாளிக்க" என்ற பதமே சரியானதாக கருதப்படுகிறது.)
ஆயுள் மற்றும் பொது காப்பீட்டில், பெரும்பாலும் இழப்புகளால் தோல்வி ஏற்படுவதில்லை. காப்பீட்டின் மூலமும் நிர்வாக திறமையாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட முடியும். ஆனால் நமது காதல் காப்பீட்டில்(!) தோல்வியால்தான் இழப்பே ஏற்படுகிறது. எப்படியெனில், தோல்விக்கு முன்(காதலிக்கும் போது) காதலிக்காக செலவழிக்கும் பணம் முதலீடாக தெரிகிறது(?!) (எப்போதோ கிடைக்க கூடிய லாபத்திற்கு இப்போதே பணத்தை போடுவதும், எப்போதோ மனைவியாகப்போகிற காதலிக்காக இப்போதே பணம் செலவு செய்வதும் முதலீடுதானே?...!) காதல் தோற்ற பின், காதலிக்கும்போது காதலிக்காக செலவழித்த பணம் இழப்பாக தெரிகிறது.
//காதல் கல்யாணத்தில் முடியாததைத் தோல்வி எனச் சொல்கிறீர்களா
அல்லது
காதல் கல்யாணத்தில் முடிவதைத் தோல்வி எனச் சொல்கிறீர்களா //
பொருத்தமற்ற பெண்ணை காதலித்து, காதல் கல்யாணத்தில் முடிவது பெரும் தோல்வி!
கல்யாணத்தில் முடியாதது சிறும் தோல்வி! ஆக மொத்தம் இரண்டும் தோல்விதான்.
//காதலில் ஏற்படுகின்ற செலவு ஐடங்கள் என்ன என்ன ? பில், ரசீது, எல்லாம் வைத்திருக்கவேண்டும். //
கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சொல்வோம். “தோற்காது” என்ற நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக்கொண்டு சில ரசீதுகளை தவறவிட்டால் நமக்கு லாபம்தான்.
//நிகர நஷ்டத்திற்குத்தான் கம்பெனி பொறுப்பேற்கும் எனவும் ஒரு க்ளாஸ் கன்டிஷன் இருக்கவேண்டும்.// நல்ல வேலை. அருமையான யோசனையை சொன்னீர்கள்.
//காதலன், காதலி இருவருக்கும் ஒரே காம்பிரிஹென்ஸிவ் கவர் தந்தால் கொஞ்சம் டிஸ்கௌன்ட் தரவும் வாய்ப்பு இருக்கிறது./
கடைசியாக, போனஸ் க்ளாஸ். அதாவது நோ க்ளைம் டிஸ்கௌன்ட்.
இது ஒரு காதலில் தோத்துப்போய், இன்னொரு காதல், அடுத்தபடி இன்னொரு காதல் அதுபோல் செய்பவர்களுக்கு.
வருஷா வருஷம் மோடர், கார், வெஹிகில் இன்சூரன்ஸு போல.
கடைசியாக, போனஸ் க்ளாஸ். அதாவது நோ க்ளைம் டிஸ்கௌன்ட்.
இது ஒரு காதலில் தோத்துப்போய், இன்னொரு காதல், அடுத்தபடி இன்னொரு காதல் அதுபோல் செய்பவர்களுக்கு.
வருஷா வருஷம் மோடர், கார், வெஹிகில் இன்சூரன்ஸு போல.
ஒரு வருட முடிவில் நஷ்டம் ஏதேனும் இல்லாது, அடுத்த வருடம் ரெனுவல் செய்யவிரும்புவர்களுக்கு ஒரு குறைவுக்கட்டணம் தரலாம்.//
மேலே தாங்கள் சொன்ன அனைத்து யோசனைகளும் நிறுவனத்தின் வெற்றிக்கு வழிகோலுவதால், தங்களை “காதல் காப்பீடு” நிறுவனத்தில் எம்.டி. போஸ்டில் பணியமர்த்துகிறோம். ஹி! ஹி! ஹி!
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் நிரந்த நன்றிகள் அய்யா!
காதலில் தோற்று போனவர்களுக்கு ஒரு காப்பீட்டு நிறுவனம் பணம் கொடுக்க முற்பட்டால் அந்த காப்பீட்டு நிறுவனம் தோற்று போகும் நன்பரே!,
ReplyDeleteஅய்யா சுப்புரத்தினம் அவர்கள் சொன்ன யோசனைகளின்படி காதல் காப்பீட்டு நிறுவனத்தை நடத்தலாம் நண்பரே!
Deleteஅப்படி ஒரு நிறுவனம் வந்தால் காதல்கள் தோற்பது அதிகரிக்குமே!
ReplyDelete\\ காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.\\
காதல் தோற்பதில்லை.. காதலிப்போர் தான் தோல்வி அடைகிறனர்!
காதல் என்பது என்ன? அதன் தோல்வி என்பது எதன் அடிப்படையில் அமைகிறது? எப்போது தோற்கிறது என்பதையெல்லாம் (எது காதல்?.. )இந்த இடுகையில் சொல்லியிருக்கிறேன் நண்பரே! வாசிக்க அழைக்கிறேன்! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅய்யா சுப்புரத்தினம் சொன்னது போல்தோல்வி என்றால் என்ன?காதலில் தோல்வி உண்டா?
ReplyDeleteஅருமை.
தொடர்ந்து எழுதுங்கள்
தங்களையும் இந்த இடுகைக்கு அழைக்கிறேன் நண்பரே! (எது காதல்?.. ) தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஆஹா ! இந்தக் காப்பீட்டு நிறுவனத்தின் முகவரிக் கிடைக்குமா ?
ReplyDeleteஅடடா! நிறுவனத்த ஆரபிச்சா நிறைய சம்பாதிக்கலாம் போல இருக்கே!
Delete"முகவரியை விசாரித்துக்கொண்டிருக்கிறோம்! விரைவில் தகவல் வெளியிடப்படும். முகவரி கிடைக்கவில்லையெனில் நிறுவனம் ஆரம்பித்து. பிறகு பிறகு தகவல் வெளியிடப்படும்" ஹி!ஹி!ஹி! தங்களது சிறப்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
சூப்பர்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!
Delete21 ஆம் நூற்றாண்டின் புதிய இன்சூரன்ஸ் திட்டம். ஆனால் ஆவணங்கள்தான் கிடைக்காது. நகைச்சுவை கவிதையாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeleteவிரைவில் திட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும் செய்யப்படலாம் அய்யா!தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!
Delete