Navigation Menu

மகுடம் சூடும் பதிவர்கள்.


தமிழ் பதிவுலகம், உலகையே மாற்றத்துடிக்கும் பல எண்ணற்ற கனவுகளை கொண்டுள்ள இளம் எழுத்தாளர்களையும், வலைப்பதிவின் மூலமே அறிமுகமாகிக்கொண்ட, பல எண்ணற்ற தமிழ் உறவுகளையும் தாங்கி நிற்கிறது. ஒரு தாய் பத்துமாதம் சுமந்த குழந்தையை பிரசவிக்கும் போது அவளுக்கு ஏற்படும் அதே உணர்வுக்கு, ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் தனது எழுத்துக்களை வெளியிடும்போதும் உள்ளாகிறான். இந்நிலையில் ஒவ்வொரு படைப்பாளனும் தாய்மையடைந்தவன்தான். ஒரு வலைபதிவன், தன் அறிவில் உதித்து, மனதில் சுமந்து, பின் தன்னால் வெளியிட்ட படைப்பு, பல கருத்துரைகளையும் பாராட்டுகளையும் வெற்றி வாகைகளாக சூடி வரும்பொழுது, ஒரு தாய், தான் கருவில் சுமந்த குழந்தை பல வெற்றி வாகைகளை சூடி வரும்போது அவள் அடையும் பூரிப்பை, ஒரு வலைபதிவனும் அடைகிறான். இந்த நேரத்தில்தான் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் தனது கனவுகள் நனவாக தான் பயணம் செய்யவேண்டிய தூரத்தையும், அதற்கான வாய்ப்புகளையும் மிக நன்றாகவே உணர்கிறான். அதுவே அவனது இலக்கை அடைய அவனை முன்நோக்கி நகர்த்தி கொண்டுபோகிறது.


இதே நோக்கத்துடன்தான், தற்பொழுது தமிழ் பதிவுலகில் மிகவும் பரபரப்பாக விருதுகள் வழங்கி உற்சாகப்படுத்துதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் எனக்கும் விருது (versatile blogger award) வழங்கி பெருமைப்படுத்தியிருப்பதை நான் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய, யுவராணி தமிழரசன் அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்! மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எனது வலைத்தளத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை சளைக்காமல் செய்த ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாஷித் அவர்களுக்கும்,

எனது தளத்திற்கு முதல் கருத்துரையிட்டு பெருமளவில் உற்சாகப்படுத்திய அன்பு அண்ணன் வேர்களைத்தேடி... முனைவர். இரா.குணசீலன்.அவர்களுக்கும்,

எனது வலைதளத்தை, வலைச்சரத்தில் பெருமைப்படுத்திய நான் பேச நினைப்பதெல்லாம். சென்னைப்பித்தன் அய்யா அவர்களுக்கும்,

தற்பொழுது எனக்கு versatile blogger award எனும் விருது வழங்கி பெருமைப்படுத்தியிருக்கும் யுவராணி தமிழரசன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிப்பதோடு.. தொடர்ந்து வருகைதந்து உற்சாகப்படுத்தும் தமிழ் கவிதைகளின்தங்கச்சுரங்கம் ஸ்ரவாணி, வசந்த மண்டபம் மகேந்திரன், சுபாகதைகள் S.C.சுதா, தீதும்நன்றும் பிறர்தர வாரா! திரு.ரமணி அய்யா, மாலதியின் சிந்தனைகள் மாலதி, மற்றும் தமிழ் உதயம். ஆகியோர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்! மேலும் இத்தளத்தில் இணைந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கும், கருத்துரை மூலம் அன்பை வெளிப்படுத்திய நண்பர்களுக்கும், இத்தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல தெரிவிப்பதில் மகிழ்கிறேன்!

versatile blogger award எனும் விருது, தொடர் வரிசையில் வழங்கப்படும் விருது என்பதறிவோம். நான் எனது மனம் கவர்ந்த அய்ந்து பதிவர்களுக்கு இந்த விருதை வழங்கும் முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்களை (“விஷயங்கள்” என்பதற்கு தூய தமிழ் சொல்லேதுவோ) பகிர வேண்டுமென்பது பரிந்துரை. ஆகவே முதலில் அதைப்பார்த்து விடலாம்.

பிடித்த ஏழு விசயங்கள்:

1.       புத்தகங்களை வாங்கி குவிப்பது.
2.       சிந்தனைகளை செயல்பாட்டிற்கு உட்ப்படுத்த முயற்சிப்பது.
3.       இசையில் கரைந்து போவது.
4.      ப்போதுதான் செடியிலிருந்து பறித்த, ஒற்றை மல்லிகைப்பூவை முகர்ந்துகொண்டே பறக்க முயற்சிப்பது.
5.       ரசிக்கும் காட்சிகளை புகைப்படமாக்கிவிடுவது.
6.       இணையத்தில் இணைந்தே இருப்பது.
7.       யாரேனும் கிடைத்துவிட்டால்.. வெட்டியாக அரட்டையடிப்பது.

இப்போது விருது வழங்கும் நிகழ்வு. விருது பெரும் அய்ந்து பதிவுலக நண்பர்கள்..

1.       திகட்ட திகட்ட கவிகளை அள்ளித்தந்து, “எப்படி இவரால் இப்படி சிந்தனையின் உயரத்தை வெகு சுலபமாக எட்டிவிட முடிகிறது?” என்று எண்ணவைக்கும், தென்காசித் தமிழ்ப் பைங்கிளி,

2. இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் கவிஞர்களின் சிந்தனையின் உயரத்தை தாண்டிவிடவேண்டும், என்ற பெரும் முயற்சியில், முதல் பயணம்மேற்கொண்டிருக்கும் ஷேக் முகைதீன்,

3.    கணினி முதல் இலக்கியம், ஆன்மிகம், உடல் நலன் என பல துறைகளிலும் பதிவெழுதி கிருஷ்ணாலயாவில் உலவவிடும் அட்சயா,

4. சிறுகதை, சினிமா விமர்சனம், அரசியல், கணினி, சமூகம் போன்ற இன்னும் பலதுறைகளிலும் தனது அழகான எழுத்து நடையில் கலக்கிவரும் உடன்பிறப்பே J.ரவிசங்கர்,

5.      இலக்கியம் மற்றும் கணினி தொடர்பான இடுகைகளை கடற்கரையில் கால் தடமாக பதித்து வைத்திருக்கும் விஜயன்

ஆகிய இந்த அய்ந்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். அவர்களை தயவு செய்து இந்த விருதினை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வதோடு, அவர்களை தங்களின் மனம் கவர்ந்த அய்ந்து பதிவர்களுக்கு இந்த விருதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விருது வழங்கும் அளவிற்கு எனது தகுதியை(!) உயர்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், ஆதரவளித்து உற்சாகப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி! நன்றி! நன்றி! 
                                                    வே.சுப்ரமணியன்.

33 comments:

  1. மணி ,
    உங்களின் முடி சூட்டு விழாவில்
    நானும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி மகிழ்கிறேன்.

    " மணியான எழத்துக்கள் வலை மகுடம் தனில்
    பதித்த வைரங்களாய் மின்ன......
    சீரிய நடை எனும் கவசம் பூட்டி
    எண்ணத் தர்பாரில் ராஜநடை போட .......
    கூரிய கருத்துக்கள் எனும் வாள் கொண்டு
    அறியாமைத் தலை வெட்டி வீழ்த்தி .....
    வாகை சூடும் வெற்றிவீரரே இளையவரே
    சுப்ரமணியரே நீவிர் என்றும் வாழ்க வளமுடன் " !

    ReplyDelete
  2. viruthu pettra anaivarukkum iniya vazthukkal.
    thangalukku sirappu vaazthukkal

    ReplyDelete
  3. sakotharaa!

    ungalin mun paththi-
    ovvoru ezhuthaalanin manathai
    velicham pottu kaatti vittathu!
    melum ungalukku
    viruthukal pala kidaikka-
    vaazhthukiren

    ReplyDelete
  4. தங்களுக்கு (வே. சுப்ரமணியனின் தண்ணீர்ப்பந்தல்) Liebster Blog விருது வழங்கப்பட்டுள்ளாது. http://atchaya-krishnalaya.blogspot.in/2012/02/blog-post_15.html#.T0CQV4fxrWU பாருங்கள் தோழரே!
    தங்களின் பரிபூரண அன்பின் வெளிப்பாடாக, Versatile Blogger Award வழங்கி சிறப்பித்தமையினை கவுரவித்தமையினை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். தங்களின் அன்பிற்கு நன்றி. அட்சயா!
    கிருஷ்ணாலயா வலைத்தளம்.

    ReplyDelete
  5. @ஸ்ரவாணி தங்களது வாழ்த்துக்களை நான் ஆசீர்வாதமாக பெற்றுக்கொள்கிறேன் சகோதரி! தங்களது தொடர் ஆதரவிற்கும், ஆசீர்வாதங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி! தங்களைப்போன்றவர்களால்தான் எனக்கு உற்சாகம் கிடைக்கிறது. அதற்க்கு நான் எப்படி நன்றி செலுத்துவது என தெரியவில்லை சகோதரி!

    ReplyDelete
  6. @கலை தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. @Seeni மிக்க நன்றி சகோதரரே! தமிழ் பதிவுலகிற்கு நான் வந்தபொழுது இளம் எழுத்தாளர்களின் கனவுகளையும் உணர்வுகளையும் நன்றாகவே உணர முடிந்தது. (ஏனென்றால் நானும் இளையவன்தானே!) நான் உணர்ந்தவைகளை பதிவு செய்தேன் நண்பரே! அவ்வளவுதான். தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
  8. @Rathnavel Natarajan தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  9. @atchaya மிக்க நன்றி நண்பரே! தங்களது உறவும் அன்பும் கிடைத்ததற்கு என் மனம் நெகிழ்கிறது நண்பரே! தாங்கள் எனக்கு விருது வழங்கிய நிகழ்வை என்னால் தற்போதுதான் அறிய முடிந்தது. தங்களிடமிருந்து நான் விருது பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன் நண்பரே! தங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. விருது பெற்றமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் நண்பரே.
    எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
    அப்படி எழுதிய பின்னும் அதற்கான அங்கீகாரம்
    கிடைப்பது மிகப் பெரிய விஷயம்..
    உங்கள் எழுத்துக்கள் இப்போது மிளிர்வதைப்போல
    இன்னும் பன்மடங்கு பெருகட்டும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. விருது பெற்ற தங்களுக்கும், அய்ந்து பேருக்கும் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  12. விருது பெற்ற தங்களுக்கும் ்தங்களிடம் விருதுபெற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  13. முதலில் மன்னிக்கவும்.தாங்கள் விருது வழங்கி சில நாட்கள் ஆகிவிட்டது.வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்ததால் உடனடியாக இதனைப் பார்க்க முடியவில்லை.என்னை சிறப்பித்தமைக்கு நன்றி.என்னை வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.எனக்கு இதனைத் தெரிவித்த தேன்மொழி திவ்யா தங்கைக்கும் நன்றி.இந்த விருது பற்றிய விபரங்களையும் நான் இந்த விருதை திரும்ப யாருக்கேனும் வழங்க வேணுமா என்று எனக்கு தெளிவுபடுத்தவும் .நன்றி திரு .வே.சுப்பிரமணியன்.

    ReplyDelete
  14. @மகேந்திரன் எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் அங்கீகாரம் கிடைப்பது, தங்களைப்போன்றவர்களின் ஆதரவினால்தான் சகோதரரே! தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
  15. @scsudha தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களை சேரட்டும்! நன்றி!

    ReplyDelete
  16. @கடம்பவன குயில் மகிழ்ச்சி சகோ! தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! தங்கள் வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களை சேரும்! வருகைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  17. @தென்காசித் தமிழ்ப் பைங்கிளி மகிழ்ச்சி சகோதரி! இந்த விருது தொடர் வரிசையில் வழங்கப்படும் விருதாகும். இங்கு விருது பெற்றவர், விருது வழங்க தகுதி படைத்தவராகிறார். தாங்கள் பெற்ற இந்த விருதையும், உற்சாகங்களையும் மற்றவர்களுக்கும் வழங்கப்போகிறீர்கள். தங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்லிவிட்டு, இந்த விருதை தங்களின் மனம் கவர்ந்த அய்ந்து பதிவர்களுக்கு வழங்குங்கள்! விருதின் படத்தை தாங்கள் விருப்பப்பட்டால், ஒரு gedgetல் இட்டு தங்களது தளத்தில் வைக்கலாம். சந்தேகமிருப்பின் எனது தளத்தின் வடிவமைப்பையும், நான் தங்களுக்கு விருது வழங்கி இட்டிருக்கும் பதிவையும் பார்வையிடுமாறு வேண்டுகிறேன்! மேலும் சந்தேகமிருப்பின் மின்னஞ்சல் செய்யுங்கள்! vsvmva@gmail.com மிக்க நன்றி சகோதரி! தங்களுக்கு நான் விருது வழங்கியதற்கு பெருமைப்படுகிறேன்! ஏற்றுக்கொண்டமைக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெறும் நண்பர்களுக்கும்

    ReplyDelete
  19. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பா! என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி!

    ReplyDelete
  20. மிக்க நன்றி ..உங்கள் பாராட்டுக்கு நான் தகுதி உள்ளவனா என்று தெரியவில்லை .....உங்கள் அளப்பரிய அன்புக்கு என்றென்றும் நன்றி

    ReplyDelete
  21. விருது பெற்றமைக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  22. @ரஹீம் கஸாலி மிக்க நன்றி நண்பரே! நாம் விரைவில் சந்திப்போம்!

    ReplyDelete
  23. @கவிதை வீதி... // சௌந்தர் // தங்களது மேம்பட்ட வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. @துரைடேனியல் தங்களது மனம் திறந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  25. @Abdul Basith தாங்கள் எனக்கு செய்து கொடுத்த உதவிகளுக்கு முன், இது மிக சாதாரணம் நண்பரே! மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. @ravi shankar j திறமையானவர்கள் போற்றப்படுவார்கள் என்பது இயற்கைதானே நண்பரே! அதனால்தான் தங்களுக்கு இந்த விருது. இதை விட பெரிய விருதுகளை பெற எனது வாழ்த்துகள்! தங்களது மேன்மை உயரட்டும்! தங்களது வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  28. @guna thamizh தங்களது மனம் திறந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  29. என்னை கவுரவப்படுதியமைக்கு மனமார்ந்த நன்றி ...

    ReplyDelete
  30. பதிவுலகில் புதிதாக நடை பயிலும் எனக்கு விருது கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி.

    பதிவு திருட்டு பற்றிய தொடர் பதிவு:
    http://vijayandurai.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!