Navigation Menu

Showing posts with label தமிழ் பதிவுலகம். Show all posts

மகுடம் சூடும் பதிவர்கள்! விழா இரண்டு.


ஒவ்வொரு கலைஞனும் தனது கலைப்படைப்பிற்கு பலனாக, கோடி கோடியாக பணத்தையோ அல்லது பொன்னையும் பொருளையுமோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக, யாரேனும் ஒருவரிடமிருந்து வரும் “நல்லாருக்கு” எனும் ஒரே ஒரு சிறிய வார்த்தை போதும், அது, எவ்வளவு பொன்னையும் பொருளையும் கொடுத்தாலும் பெற்றுத்தராத மகிழ்ச்சியை, அந்த ஒரு சிறிய வார்த்தை பெற்றுத்தரும். தற்போது தமிழ் பதிவுலகமும் இது போன்ற மகிழ்ச்சிகளை, இல்லை இதை விட மிகப்பெரிய மகிழ்ச்சிகளை பரிமாறிக்கொண்டு வருகிறது. இது விருதினை பகிர்ந்து கொள்வது, எனும் முறையில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் விருது பெரும் ஒவ்வொரு பதிவனும், தான் செல்லும் பாதையில் அசைக்க முடியா நம்பிக்கையுடன், கம்பீர நடைபோடுகிறான்.

மகுடம் சூடும் பதிவர்கள்.


தமிழ் பதிவுலகம், உலகையே மாற்றத்துடிக்கும் பல எண்ணற்ற கனவுகளை கொண்டுள்ள இளம் எழுத்தாளர்களையும், வலைப்பதிவின் மூலமே அறிமுகமாகிக்கொண்ட, பல எண்ணற்ற தமிழ் உறவுகளையும் தாங்கி நிற்கிறது. ஒரு தாய் பத்துமாதம் சுமந்த குழந்தையை பிரசவிக்கும் போது அவளுக்கு ஏற்படும் அதே உணர்வுக்கு, ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் தனது எழுத்துக்களை வெளியிடும்போதும் உள்ளாகிறான். இந்நிலையில் ஒவ்வொரு படைப்பாளனும் தாய்மையடைந்தவன்தான். ஒரு வலைபதிவன், தன் அறிவில் உதித்து, மனதில் சுமந்து, பின் தன்னால் வெளியிட்ட படைப்பு, பல கருத்துரைகளையும் பாராட்டுகளையும் வெற்றி வாகைகளாக சூடி வரும்பொழுது, ஒரு தாய், தான் கருவில் சுமந்த குழந்தை பல வெற்றி வாகைகளை சூடி வரும்போது அவள் அடையும் பூரிப்பை, ஒரு வலைபதிவனும் அடைகிறான். இந்த நேரத்தில்தான் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் தனது கனவுகள் நனவாக தான் பயணம் செய்யவேண்டிய தூரத்தையும், அதற்கான வாய்ப்புகளையும் மிக நன்றாகவே உணர்கிறான். அதுவே அவனது இலக்கை அடைய அவனை முன்நோக்கி நகர்த்தி கொண்டுபோகிறது.