Navigation Menu

மகுடம் சூடும் பதிவர்கள்! விழா இரண்டு.


ஒவ்வொரு கலைஞனும் தனது கலைப்படைப்பிற்கு பலனாக, கோடி கோடியாக பணத்தையோ அல்லது பொன்னையும் பொருளையுமோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக, யாரேனும் ஒருவரிடமிருந்து வரும் “நல்லாருக்கு” எனும் ஒரே ஒரு சிறிய வார்த்தை போதும், அது, எவ்வளவு பொன்னையும் பொருளையும் கொடுத்தாலும் பெற்றுத்தராத மகிழ்ச்சியை, அந்த ஒரு சிறிய வார்த்தை பெற்றுத்தரும். தற்போது தமிழ் பதிவுலகமும் இது போன்ற மகிழ்ச்சிகளை, இல்லை இதை விட மிகப்பெரிய மகிழ்ச்சிகளை பரிமாறிக்கொண்டு வருகிறது. இது விருதினை பகிர்ந்து கொள்வது, எனும் முறையில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் விருது பெரும் ஒவ்வொரு பதிவனும், தான் செல்லும் பாதையில் அசைக்க முடியா நம்பிக்கையுடன், கம்பீர நடைபோடுகிறான்.


    இதே வரிசையில்தான் எனக்கும் இதுவரை இரண்டு விருதுகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முதல் விருதினை வழங்கி உற்சாகப்படுத்தியவர் அன்பு சகோதரி யுவராணி தமிழரசன் அவர்கள். அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்! முதல் விருதின் மகிழ்ச்சி அடங்கும் முன்னே மற்றொரு விருது கொடுத்து மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார் அன்பு சகோதரர் அட்சயா அவர்கள். அவர்களுக்கும் எனது மனமார்ந்த திறந்த நன்றிகள்! இந்நேரத்தில் பதிவுலகில் அளவற்ற அன்புகாட்டிவரும் அனைத்து அன்பு உள்ளங்களையும் நன்றியோடு பார்க்கிறேன்! அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! முதல் விருதினை பகிரும்போது, “பதிவுலகில் திறமையானவர்கள் இன்னும் நிறையபேர் இருக்க, அய்ந்து பேருக்கு மட்டும்தானே விருது கொடுக்க முடிகிறது!” என்று சிறிய வருத்தம் இருந்தது. அதை அட்சயா அவர்கள், எனக்கு இந்த விருதினை கொடுத்து போக்கி விட்டார்கள். அவர்களது அன்புக்கு மீண்டும் நன்றியை தெரிவிக்கிறேன்!

சரி, இப்போது எனும் இந்த விருதை பற்றி பார்க்கலாம். இந்த விருது ஜெர்மனிய விருது என்று கூறப்படுகிறது. இந்த விருதினை பெற்றவர், தனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்லி, பிறகு நூற்றைம்பதுக்கும் குறைவான பின்தொடர்பவர்களை கொண்ட, அய்ந்து திறமையான, மனம் கவர்ந்த பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரி, இப்போது விருது வழங்கும் நிகழ்வுக்கு வருவோம். இப்போது எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்ல வேண்டும். ஆனால் முந்தய பதிவிலேயே அதை சொல்லி விட்டதால் இப்போது நேரடியாக மகுடத்தை சூட்டுவோம்!

என் மனம் கவர்ந்து, திறமையால், மகுடம் சூடும் அய்ந்து பதிவர்கள். இதோ..
1.“மற்றவர்க்கு சேவை செய்வதே உண்மையான மனமகிழ்சியை தரும் செயல்” என்று, மிகப்பெரும் சமூக சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், “அந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிரும்போது, மற்றவரிடமும் சேவை மனப்பான்மையை வளர்க்கலாம்”, என்று தனது அனுபங்களை, பதிவுகளாக பதிந்துவரும் ஈரம்மகி மகேந்திரன் அவர்களுக்கும்,
2. குழைந்தைகளின் உரிமைகளை மதிக்க, சட்ட ரீதியாக அறிவுறுத்தும் வகையில் சமூக நோக்கோடு அழகாக பதிவிட்டுவரும் 498A-குழந்தை என்ற அந்த நண்பருக்கும்,
3.   தமிழ் வரலாற்றை நாம் யார்? என்ற தொடர் பதிவில் பதிவிட்டு தமிழின் வரலாறு போற்றும் மக்களாட்சி நடத்திவரும் அன்பு நண்பருக்கும்,
4.கல்வி, அனுபவம், சமூக அவலங்கள், நகைச்சுவை,போன்றவற்றை மிக மிக நேர்த்தியாக பதிவிட்டுவரும் டி.என்.முரளிதரன் அவர்களுக்கும்,
5.வணிகம், பொருளாதாரம், பங்குசந்தை, வங்கி போன்ற இன்னும் பல பணம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் பதிவுகளை இட்டுவரும் பங்குசந்தைஇ-லேர்னிங் நடத்திவரும் நண்பருக்கும், இந்த விருதினை வழங்குகிறேன்!

இந்த அய்ந்து நண்பர்களுக்கும் விருது வழங்குவதை பெருமையாக கருதுகிறேன்! தயவு செய்து நண்பர்களை இந்த விருதினை அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்! மகுடம் சூடிய அய்ந்து பதிவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! மேலும் அவர்களை, அவர்களின் மனம் கவர்ந்த பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
      இறுதியாக ஓன்று. வலைச்சரத்தில் தென்காசித் தமிழ்ப் பைங்கிளி, எனது இடுகை சிறைவாசி! யை அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்! (வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக தண்ணீர்ப்பந்தல் வலம் வருவதை மகிழ்வுடன் பகிர்கிறேன்!)

டெரர்கும்மி 2011 விருது வழங்கும் நிகழ்வில், சிறுகதை பிரிவில், பத்துரூபாய் ஞானி! என்ற எனது படைப்பிற்கு இரண்டாம் பரிசு வழங்கி உற்சாகப்படுத்திய, டெரர்கும்மி நண்பர்களுக்கும், நடுவர் குழுவிற்கும், ஆதரவளித்து உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! நன்றி! நன்றி!


                                                           வே.சுப்ரமணியன்.

20 comments:

  1. உங்களுக்கு எங்களின் அன்பும், நல்லாதரவும் என்றும் உண்டு. தங்களின் ஓய்வில், கிருஷ்ணாலயாவில் இளைப்பாருங்கள்! புதிய பதிவுகளைக் கண்டு, கருத்தளியுங்கள் எனது இனிய நண்பரே!

    ReplyDelete
  2. vaazhukkal nanpaa!
    ungalukkum -
    neengal pakirnthu kondavarkalukkum!

    ReplyDelete
  3. உங்களின் அன்புக்கு நன்றிகள் , விருதுகள் , பரிசுகள் , விளம்பரங்களை நோக்கி மக்களாட்சி பயணிக்க வில்லை , இளைஞர் மத்தில் அரசியல் தாகத்தை உண்டு பண்ண முயற்சி செய்கிறோம் , எங்களை முன்நிறுத்திய உங்களுக்கு நன்றிகள்,

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  5. @atchaya மிக்க நன்றி நண்பரே! தங்களது அன்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. @Seeni தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழமையே! தங்களது வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களை சேரும். நன்றி!

    ReplyDelete
  7. @மக்களாட்சி மகிழ்ச்சி நண்பரே! தங்களது இந்த சிறப்பான சேவைக்கு உதவ நாமும் விரும்புகிறோம்! எம்மையும் இணைத்துக்கொள்வீர்களா?

    ReplyDelete
  8. @மகேந்திரன் தங்களது மனம் திறந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சுப்ரமணியன் ,அவர்களே !!!!! தங்கள் தான் எனது வலை பூ விற்கு முதல் ,பின்னூட்டம் அளித்தவர்..எனக்கு நல்ல உற்சாகத்தையும் ஏற்படுதிநீர்கள்.தங்கள் சேவை தொடர இந்த சிறியவனின் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. @pangusanthaieLearn எதை வைத்து நண்பா தங்களை தாங்கள் சிறியவன் என்று கூறிக்கொண்டீர்கள்? எப்போதும் நீங்கள் உச்சியை நோக்கியே பயணிப்பவர். ஆகவே தாங்கள் அப்படி கூற வேண்டாம். தங்களது அன்புக்கு நன்றி நண்பரே! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. தரமான பதிவுகள் மூலம் பல விருதுகளை குறுகிய காலத்தில் பெற்ற நண்பரே உங்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயத்தில் LIEBSTER BLOG VIRUDHAI எனக்கும் அளித்து பெருமைப்படுத்தியதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் 5 பதிவர்களுக்கு விருது வழங்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதிவர்களை தேர்ந்தேடுத்தவுடன் எனது வலைப்பூவில் வெளியிடுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  12. @T.N.MURALIDHARAN தங்களது மனம் திறந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களது பதிவுகளை பெருமைப்படுத்தும் வாய்ப்பாகத்தான் இதை செய்தேன். தாங்களும் அதுபோல் செய்வதை நினைத்து மகிழ்கிறேன். பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி! தங்களது பொண்ணான பணி சிறக்க மனம் திறந்த வாழ்த்துக்கள்! வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  13. விருது வழங்கும் யோகம் உங்களுக்குதானோ...பத்து பேருக்கு விருது வழங்கி உள்ளீர்கள்.. இரண்டு விருது பெற்றுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தரமான பதிவுகளை வெளிக்கொனர்வதற்க்கான கருவியாக விருதை கருதுகிறேன்! தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! தங்களது தொடர் ஆதரவால் நான் நெகிழ்ந்து போகிறேன்! நன்றி தோழி!

    ReplyDelete
  15. விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  16. நன்பர் சுப்பிரமணிக்கும் விருதுகளை பெறும் நன்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. @...αηαη∂.... தங்களது மேம்பட்ட வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. @விஜயன் தங்களது மனம் திறந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா! விருது பெற்றவர்களுக்கு தங்களது வாழ்த்துக்கள் சென்று சேரட்டும் நண்பா!

    ReplyDelete
  19. இரண்டு விருது பெற்றுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. @மாலதி தங்கது தொடர் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!