ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் ஆசையை
உடைத்தெறிந்துவிட்டு
ஹோட்டலில் டேபிள் துடைக்கிறேன்,
குடும்பத்தின்
வறுமையை துடைக்க.
உணவருந்த வருவோரின்
தங்க மோதிரமும்
வைர வளையல்களும்.
என் அப்பாவிடம்
இதெல்லாம் இல்லையே!
ஏன் இல்லை?...
கல்லுடைப்பதால்
சம்பளத்தைவிட அதிகமாக
கையில் கிடைக்கும்
கைப்புண்கள்,
என் தந்தைக்கு தங்க மோதிரம்!
அதை ஆற்ற
எண்ணெய் தடவி
கையில் சுற்றியிருக்கும்
துணிக்கட்டு,
என் தாய்க்கு தங்கவளையல்!
மேற்கொண்டு தைப்பதற்கு
முழங்காலுக்கு சுருங்கிய
சேலையை கட்டிய
என் தாயும்,
அவள் இடுப்பில்
அரைஞான் கயிறை மட்டுமே
உடையாய் உடுத்தி,
கம்பீரமாய் வீற்றிருக்கும்
என் ஐந்து வயது தம்பியும்,
சிரித்துக்கொண்டே
மனத்திரையில் வந்து சென்றார்கள்
விதவிதமாய்
உடை உடுத்தியிருப்பவர்களை
பார்த்ததும்.
வாங்கிய சம்பளத்தை
மணியார்டர் பாரத்தில் எழுதுகிறேன்
வீட்டிற்கு அனுப்ப.
பழைய நினைவுகள்
மீண்டும் வருகிறது.
கூடவே அழுகையும் வந்தது.
அடக்கிக்கொண்டேன்
பார்ப்பவர்கள் காரணம் கேட்பார் என்று.
ஆனாலும்
அழுகை வந்தது.
அழுகையில் வந்தது
கண்ணீரல்ல.....
மனம் கலங்க வைக்கின்றது!
ReplyDeleteமனமார்ந்த வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteநன்றி நட்பே! எனது பதிவையும் இணைத்துக்கொண்டேன்! நன்றி!
Deleteசிறந்த படைப்பு. உங்கள் வருங்காலம் சிறப்புற இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteதங்களது மனம் நிறைந்த ஆசிர்வாதங்களுடன் நான் இனிதே பயனப்படுவேன் அய்யா. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteநிதர்சன உண்மையினைக் கவிதையாய் வடித்துள்ளத் தோழருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள்!
http://vallimalaigurunadha.blogspot.com
http://krishnalaya-atchaya.blogspot.com
தங்களது பாராட்டுகளும், வாழ்த்துகளும் என்னை மேம்படுத்தும் அய்யா! தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteஅருமை அருமை
ReplyDeleteகவிதையின் இறுதிவரிகள்
கண்கலங்கச் செய்துவிட்டன
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களது சிறப்பான வருகையால் மகிழ்கிறேன் அய்யா! தங்களது மனம் கவர்ந்த பதிவாக, வாசித்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
Deleteநல்ல படைப்பு சுப்பிரமணியன்.இப்படி படிக்கும் வயதில் வேலை செய்பவர் ஏராளம்.அவர்களில் சிலர் அறியாமை காரணமாக படிப்பதைவிட முதலாளியிடம் அடிபட்டு உதைபட்டாலும் வேலை செய்வதையே விரும்புகிறார்கள். இந்த நிலையை போக முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே! கற்பிப்பு முறைகளை விட, முதலாளியின் அடி உதைகள் சாதாரணமாக படலாம். ஒருபக்கம் கற்பித்தல் முறைகள், ஒருபக்கம் ஏழ்மையுடன் அறியாமை, இவைகள்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாக முக்கிய காரணங்கள்.
Deleteகற்பித்தல் முறைகளிலும், ஏழ்மையிலும் மாற்றம் கண்டுவிட்டால், இந்த நிலையை போக்கிவிடலாம்.
அருமை நெஞ்சைதொடும் பதிவு. கனவுகளும் கடமைகளும் கண்முன்னே விரிகின்றன்.....
ReplyDelete:'(
தங்களது கனவுகளும் கடமைகளும் கண்முன்னே விரியச்செய்த ஒரு படைப்பை, படைத்தமைக்கு நான் பெருமைகொள்கிறேன் நண்பா! தங்களது வருகைக்கும் பகிர்தளுக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteஅருமையான படைப்பு.. ஏழ்மை நிலையை உணர்ந்தவரால்தான் இப்படி எழுத முடியும்.. ! ஒவ்வொரு வரியும் மனதில் நிற்கிறது..!
ReplyDeleteஉண்மைதான் நண்பரே! அந்த பதினான்கு வயதுடையவன் வேறு யாருமல்ல நண்பரே!நான்தான், நானேதான். அந்த நினைவுகள் நெஞ்சில் வரும்போதெல்லாம் கண்களில் கண்ணீர் ததும்பும். தங்களது வருகைக்கும் உணர்வுகளை புரிந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deletesako!
ReplyDeletekalanga vaiththathu varikal!
தங்களது வருகைக்கும் பகிர்தளுக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteநச் கவிதை நண்பா.. சிலிர்க்க வைத்தன இறுதி வரிகள் (TM 5)
ReplyDeleteவாருங்கள் நண்பரே! தங்களது வரவு மகிழ்வளிக்கிறது. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteமிக மிக எதார்த்தமான கவிதை நண்பா. வறுமையின் வழி உணர்த்தும் கவி
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
தல போல வருமா (டூ) பில்லா டூ
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html
தங்களது பதிவை படித்தேன் நண்பரே! மேற்கொண்டு கருத்துரையிட்டுருக்கிறேன். தங்களது வருகைக்கும் நன்றி நண்பா!
Deleteஅழகாகச் சொன்னீர்கள் நண்பா.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!
Deleteஇளமையில் வறுமை கொடுமை ,வலியின் பதிவுகளை கவிதை உரைக்கிறது .
ReplyDeleteவலியை புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவலியில் கசிந்த வார்த்தைகள் போல கனக்கிறது இதயத்தில்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteஇந்த பதிவை வலைச்சரத்தில் -
ReplyDeleteஅறிமுகம் செய்துள்ளேன்!
வருகை தாருங்கள்!
http://blogintamil.blogspot.sg/
என் எழுத்திற்கு மகுடம் சூட்டி, என்னையும் சரத்தில் தொடுத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!
Deleteவலைச்சரம் மூலம் முதல் வருகை! தொடர்கிறேன்! கலங்க வைத்த கவிதை! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
தங்களை தண்ணீர்ப்பந்தலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே! தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம். தங்களது வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி!
Deleteவறுமை பிள்ளையின் மனதை உறுதியாக்குகிறது.. உறுதி வைராக்கியமாகிறது... வைராக்கியம் இங்கே வைரமாக கவிதை வரிகளாக மிளிர்கிறது...
ReplyDeleteஎத்தனையோ பிள்ளைகள் நன்றாக படிக்கும் திறன் இருந்தும் வசதியின்மையால் வேறு வழியின்றி இதுபோன்று வேலைகள் செய்து தன் வயிற்றுப்பசி கூட பார்க்காது தன் குடும்பத்துக்காக தன் கல்வி துறந்து பிழைத்து உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் திண்மை தெரிகிறது கவிதை வரிகளில்....
நேர்மையாக உழைத்து பாடுபட்டாலும் பணம் கைக்கு வந்ததும் தன் சுகத்தைப்பற்றி கூட கவலைப்படாமல் தன் தந்தை உழைத்து கைகளெல்லாம் காய்த்து புண்ணானதை நினைத்து அப்பாவுக்கு தங்க மோதிரம் வாங்கித்தர துடிக்கும் பிள்ளையின் பாசம் தெரிகிறது கவிதை வரிகளில்....
தன் உயிரையே ஊணாக்கி பிள்ளைகளுக்கு ஊட்டிய தாய்க்கு தங்க வளையல் மனதில் பூட்டி அழகு பார்க்கிறது பிள்ளை.... தன் தம்பியாவது நன்றாக படித்து தன்னைப்போல கஷ்டப்படாமல் வாழ்க்கையில் படித்து முன்னேறவேண்டும் என்ற வைராக்கியம் கவிதை வரிகளில் பிரகாசிக்கிறது...
வாசிப்போரின் மனதில் நிலைத்து நிற்கும் பிள்ளையின் எண்ணங்கள் கண்டிப்பாக....
ஒவ்வொரு பிள்ளையும் இப்படி சிந்தித்து பாடுபட்டு உழைத்தால் வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் வண்ணம் முன்னுக்கு வரும் என்று உறுதியாய் உரைக்கிறது கவிதை வரிகள்....
அழகிய அருமையான சிந்தனை வரிகள் எளிய நடையில் வாசிப்போரின் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய வரிகள்....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் சகோ அருமையான கவிதை பகிர்வுக்கு....
த.ம. 1
ReplyDeleteமனம் நிறைந்த, மனம் நெகிழ்ந்த நன்றிகள் சகோ! இக்கவிதையை எழுதியபோது ஏற்பட்ட மன நெகிழ்வு, தாங்கள் இந்த கவிதையை வாசித்து, அதன் உணர்வை புரிந்து, இட்ட கருத்துரையை நான் வாசிக்கும் போதும் உணர்கிறேன்!
Deleteபழைய நினைவுகள்
மீண்டும் வருகிறது!
எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் சகோ! மிக்க நன்றி!
வணக்கம்,
ReplyDeleteவே.சுபிரமணியன்
உண்மையில் கவிதைதை வாசித்த போது என் மணதை கலங்கவைத்து விட்டது, உண்மையில் உன் பெயரிலும் ஒரு மகத்துவம் உள்ளது அதுவும் வெற்றிகடவுளின் பெயர்(முருகன்)நீங்கள் நல்ல ஒரு எழுத்தாளனாக வளரவேண்டும் எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்கள் கலங்குகின்றன அய்யா! தங்களது அன்பால் நான் நெகிழ்ந்துபோகிறேன்! எங்கோ முன்பின் பழகாத உறவுகள், எங்கோ இருக்கும் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை நினைக்கும்போது....., நான் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை அய்யா! வார்த்தைகள் தெரியவில்லை! தங்களது அன்புக்கும், அன்பு நிறைந்த வாழ்த்திற்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் அய்யா!
Deleteஏழ்மை ஒரு தீ
ReplyDeleteஇரும்பை கருவியாக்கும் உலைக்களத்தின் தீ,
இருளை விரட்டும் விளக்காய் தீ
இந்துச் சடங்குகளின் மையமான வேள்வித் தீ,
ஏழிமையை கண்ணீராக்காது, கவிதை ஆக்கியதும
உங்களின் அடிவயிற்றில் எரியும் அடங்கத் தீ.
தீ பரவட்டும். வாழ்த்துக்கள்.
வருகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteha......ha......
ReplyDeleteவருகைக்கு நன்றி நட்பே!
Delete