அறிவைப்பற்றிய தத்துவங்களும், அறிவை விளக்க முற்படும் முயற்சிகளும், பல்வேறு காலகட்டங்களிலிருந்து இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவந்துகொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இது அதிகமாகும் என்பது நமது நம்பிக்கை. ஆனாலும் இந்த கால கட்டத்தில் அறிவை விளக்க முற்படும் நமது சிறிய முயற்சி. அதற்க்கு முன் நமது சான்றோர்களின் வியக்கத்தக்க விளக்கங்கள் சில..
அறிவை விளக்கும் தொல்காப்பியர்
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு நாக்கே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
புல்லும் மரணும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
மக்கள் தாமே ஆறாறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
ஒருசார் விளங்கும் உள என மொழிப
அறிவு, உயிரினங்களையும், புலன்களையும் அடிப்படையாக வைத்து ஆறாக பகுக்கப்பட்டிருப்பதையும் அது எந்தெந்த உயிரினங்களுக்கு எந்தெந்த அறிவு என்றும் அதே போல் எந்தெந்த புலன்கள் எந்தெந்த நிலைக்கான அறிவுடன் செயல்படுகின்றன என்று மேற்கண்டவாறு தொல்காப்பியர் விளக்கியிருகிறார்.
ஓரறிவு – தொடுவறிவு மட்டுமே கொண்டவைகள் ஓரறிவு உயிரினமாக பகுக்கப்பட்டுள்ளது. புல், செடி, கொடி, மரம், போன்றவை ஓரறிவு உயிரினங்களாகும்.
ஈரறிவு – தொடுவறிவுடன் சேர்த்து இரண்டாவதாக சுவையறிவும் கொண்ட உயரினங்கள், ஈரறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சங்கு, சிப்பி போன்றவை ஈரறிவு உயிரினங்களாகும்.
மூவறிவு – தொடுவறிவு, சுவையறிவு ஆகியவற்றுடன் மூன்றாவதாக சுவாச அறிவும் (மோப்ப சக்தி) கொண்ட உயரினங்கள், மூவறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சிதல்(கரையான்), எறும்பு போன்றவை மூவறிவு உயிரினங்களாகும்.
நான்கறிவு - தொடுவறிவு, சுவையறிவு, சுவாச அறிவு ஆகியவற்றுடன் நான்காவதாக விழியறிவும் (கண்களால் கண்டு உணர்தல்) கொண்ட உயரினங்கள், நான்கறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. நண்டு, தும்பி போன்ற உயிரினங்கள் நான்கறிவு உயிரினங்களாகும்.
ஐந்தறிவு - தொடுவறிவு, சுவையறிவு, சுவாச அறிவு, விளியறிவு, ஆகியவற்றுடன் ஐந்தாவதாக செவியறிவும் கொண்ட உயரினங்கள், ஐந்தறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. விலங்குகளும், பறவைகளும் ஐந்தறிவு உயரினங்களாகும்.
ஆறறிவு – மேற்கண்ட ஐந்து அறிவுகளையும் சேர்த்து ஆறாவதாக பகுத்தறியும் அறிவை கொண்ட ஓர் உயிரினம் தான் மனிதன். தற்காலத்தில், பகுத்தறிவு கீழ்க்கண்டவாறு பல்வேறு வகைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
கல்வி அறிவு
கேள்வி அறிவு
அனுபவ அறிவு
தன்னறிவு
சொல்லறிவு
நுண்ணறிவு
இயற்கையறிவு
உணர்வறிவு
தொழில்சார் அறிவு
ஆள்மனப்பதிவறிவு
அறிவை விளக்கும் திருவள்ளுவர்.
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நற்றின்பால் உய்ப்பது அறிவு.
பொருள்: மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்: எந்தப் பொருளைப்பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு.
அறிவு முந்தய காலங்களில் எப்படி பகுக்கப்பட்டிருக்கிறது, என்று அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியின் ஒன்றே சொல்! நன்றே சொல்! நிகழ்ச்சியின் வழியாக எடுத்துக்கூறியதை கீழே தந்திருக்கிறேன்.
அறிவு முந்தய காலங்களில் எப்படி பகுக்கப்பட்டிருக்கிறது, என்று அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியின் ஒன்றே சொல்! நன்றே சொல்! நிகழ்ச்சியின் வழியாக எடுத்துக்கூறியதை கீழே தந்திருக்கிறேன்.
வேதகாலத்தில் அறிவு.
மேல் அறிவு. ஆண்மிகத்தேடல் மூலம் பெறும் அறிவு மேல் அறிவு எனப்பட்டது.
கீழ் அறிவு. கலைகளில் உள்ளவை கீழ் அறிவு.
சமணம் மேலோங்கிய காலத்தில் அறிவு.
நேர் அறிவு. சுய அனுபவம் (பிறர் மனதினை உணருதலும் சுய அனுபவமாக கருதப்பட்டது).
வழி அறிவு. படித்து பெற்றவை, பிறர் சொல்ல கேட்டு பெற்றவை. பெற்றவை யாவும் வழி அறிவாக கருதப்பட்டது.
பௌத்தம் மேலோங்கிய காலத்தில் அறிவு.
புலன்கள் உணருபவையே அறிவு.
(நன்றி... கலைஞர் தொலைக்காட்சிக்கும், அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும்).
பௌத்தம் மேலோங்கிய காலத்தில் புலன்கள் உணருபவையே அறிவு, என்று கூறப்பட்டிருக்கிறது. இதைப்படிக்கும் இந்நேரத்தில்.. மூன்று புலன்களை இழந்தும் கவலைகொள்ளாது மற்ற இரு புலன்களைக்கொண்டே அறிவுலக மேதையான ஹெலன் ஹெல்லரையும், அவரைப்போன்ற இன்னும் பலகோடி பேர்களையும் நாம் நினைத்து பார்ப்பது பெருமைக்குரியதாக இருக்கும்.
இப்போது அறிவைப்பற்றிய நமது கருத்துப்பதிவு...
"அறிவு என்பது., ஒருவன், ஒரு செயலினைப்பற்றிய பல்வேறு பரிணாமங்களை தனக்குள் கிரகித்துக்கொண்டால், அந்த கிரகித்துக்கொள்ளப்பட்டவை யாவும் அறிவு என்றழைக்கப்படும்".
அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகள்
விளங்கிக்கொள்ளல்
தெரிந்துகொள்ளல்
புரிந்துகொள்ளல்
கற்றுக்கொள்ளல்
உணர்ந்துகொள்ளல்
அறிந்துகொள்ளல்
அனுபவப்படுதல்
மேற்க்கண்ட யாவும் அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகளாகும். இவ்வழிகள் யாவையும் சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் திறப்பது கடினம். தொடர்ச்சியான ஓங்கிய சிந்தனையின் மூலம்தான் அறிவின் கதவுகளை மெல்ல மெல்ல திறக்க முடியும். சிந்திக்கும் தன்மையும் அதன் விளைவை கிரகிக்கும் தன்மையும் இல்லாமல் அறிவு வளர்சியடைவதில்லை.
அறிவின் மூலங்கள்
அறிவின் மூலங்கள் என்று பார்க்கும்போது, இவ்வுலகில் காணப்படும், மற்றும் காணப்படா யாவும் அறிவின் மூலங்கலாகும். இந்த மூலங்கள் ஒவ்வொரு தனிமனிதனின் அறிவுத்தேடலின் அளவைப்பொருத்து வேறுபாடும். அறிவுப்பசியில் உள்ளவனுக்கு இவ்வுலகில் உள்ள அனைத்தும் ஆசானாக திகழ்கிறது. கற்றுக்கொடுக்க யாவும் தயார்! ஆனால் அதை நாம் கண்டுகொள்ளவே தயாராக இல்லை.
அறிவுப்பசி
மனிதனைப்பொருத்தவரை பசி எனப்படுவது, மூன்று வகையாக பகுக்கப்படுகிறது. அவையாவன.. உணவுப்பசி, காமப்பசி, அறிவுப்பசி. (கடைசி இரண்டு எல்லாவகையான மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை). இதில் முதல் இரண்டு பசிகள், அதற்கான தேவைகளை நிறைவேற்றியவுடன் அப்போதைக்கப்போது அடங்கிவிடுவதுண்டு. ஆனால், அறிவுப்பசி எனப்படுவது, அதற்கான இரையை உட்கொள்ள உட்கொள்ள அதிகமாகுமே தவிர அடங்கிப்போவதில்லை. அதனால்தான் மனிதன் அறிவுப்பசிக்கான இரையை “அறிவுத்தேடல்” என்கிற ஒன்றை கொண்டு பெற்றுக்கொள்கிறான். பரிணாம வளர்ச்சியும் தடைபடுவதில்லை.
பகுத்தறிவு
ஒரு செயலைப்பற்றிய, ஒவ்வொன்றையும் தனித்தனியே பகுத்து, அதன் உண்மை தன்மையை கண்டறிவதே பகுத்தறிவாகும். ஐம்புலன்களைக்கொண்டு, கண்டதையும், கேட்டதையும் அறிவெனக்கொண்டால் அது ஐந்தறிவுள்ள உயிரினங்களின் தன்மையாகவே படும். மாறாக எந்த ஒரு நிகழ்வுகளையும் தகுந்த ஆய்வுக்கு உட்ப்படுத்தி அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தறிபவனே மனிதன்.
தற்காலத்தில் “பகுத்தறிவு” எனும் சொல்லாடல், ஒரு இயக்க அமைப்பிற்கு உட்ப்பட்டதாக ஒரு சாரரால் பார்க்கப்பட்டாலும், அந்த சொல்லாடலால் சமூகத்திற்கு தேவையான பல அடிப்படை மாற்றங்கள், மிகப்பெருமளவில் நிகழ்ந்துள்ளபடியால், அதை ஏற்றுக்கொள்வதில் பிழை இருக்கப்போவதில்லை.
எப்படியாயினும், அறிவு முழுமையடைவது, அதை சரியாக பயன்படுத்தும்போதுதான். அறிவை, தனக்குமட்டுமல்லாது, அனைவருக்கும் இன்பத்தைகொடுக்குமாறு பயன்படுத்த தெரிந்தவனே, அறிவாளி. இப்போது, நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரத்தில் இருக்கிறோம்.
வே.சுப்ரமணியன்.
பயனுள்ள தேடல் நண்பா..
ReplyDeleteதொடர்புடைய இடுகைகள்.
ReplyDeleteபுத்தியைத் தீட்டுவது எப்படி?
http://thamizhkkaatru.blogspot.com/2011/10/blog-post.html
அறிவெனப்படுவது யாது?
http://thamizhkkaatru.blogspot.com/2011/09/blog-post_29.html
தொல்காப்பியரின் உயிர்க்கோட்பாடு.
http://gunathamizh.blogspot.com/2009/05/blog-post_25.html
தங்கள் தள வடிவமைப்பு மிகவும் அழகாகவுள்ளது..
ReplyDeleteகருத்துரையிடும்போது வேர்டு வெரிபிகேசன் தடையாகவுள்ளது..
அதை எடுத்துவிட்டால் இன்னும் நிறைய கருத்துரைகள் தங்களுக்குக் கிடைக்கும் நண்பா
மேலும் தங்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
எங்கு படித்தீர்கள்
இப்போது பணியிலா? படிப்பிலா?
வணக்கம் முனைவர் அவர்களே! மிக்க நன்றி! தங்களது வருகைக்கும், தொடர்புடைய இடுகைகளை காண்பித்ததற்க்கும், தங்களது மேம்பட்ட ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி! என்னைப்பற்றிய விவரங்களை தங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நன்றி.
ReplyDeleteநல்ல தகவல். நன்றி.
ReplyDelete//நல்ல தகவல். நன்றி.//
ReplyDeleteமுகம் காட்டா நண்பரே! தங்கள் முகம் காண விரும்புகிறோம். தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு
ReplyDeleteஇத்தனைத் தெளிவாக ஆழமாக விரிவாகபடைப்புகளைப் படித்து
வெகு நாட்களாகிறது
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர்ந்து சந்திப்போம்
@Ramani எனது ஒவ்வொரு படைப்பையும், தங்களது பொண்ணான நேரத்தை ஒதுக்கி, வாசித்தது மட்டுமல்லாது, தங்களது உற்சாக வார்த்தைகளை கொட்டிச்செல்லும் தங்களது அன்பு மனதிற்கு, எனது சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா!
ReplyDeleteமிகச் சிறப்பான பதிவு சகோதரா..
ReplyDeleteவாசித்ததில் மகிழ்ந்தேன்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது மகிழ்வை பகிர்ந்துகொண்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ!
DeleteAyya thangalin arivu endra thalaippu mikka arumai
ReplyDeleteK.Dhanasekaran
excellent
ReplyDeleteதனசேகரன் அய்யா அவர்களுக்கு.. மிக்க நன்றி அய்யா! தங்களது வரவிற்கும் உந்துதல் கொடுக்கும் தங்களது பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
Delete