Navigation Menu

கருப்பு வானவில்கள்!


நீ
என்றைக்காவது
கருப்பு வானவில்லை
பார்த்ததுண்டா......?
கூந்தல்


பல
கருப்பு வானவில்களை
ஓன்றுசேர்த்து கட்டி
பூச்சூடி..?
கருப்பு வானவில்கள்

நான் உறுதியாக
சொல்வேன்.
நீ பார்த்திருக்கிறாய்.

கூந்தல் அழகி
ஆமாம்..

நீ தினமும்
சிகையலங்காரம்
செய்துகொள்கிறாயே!
                                         வே.சுப்ரமணியன்.




27 comments:

  1. Replies
    1. வாருங்கள் நண்பரே! தங்களை தண்ணீர்ப்பந்தலுக்கு வரவேற்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. ம்ம்.நான்கூட பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடடா.. அப்போ ரசித்தேன் என்று கூறுங்கள்! எங்கு கண்ணாடியிலா? தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. கவிதை அருமையாய் எழுதுகின்றீர்கள்! என்னத் தயக்கம் ? தொடருங்கள் உங்களின் கவிதைகளை! பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி என் பயணத்தை மேம்படுத்தும் அய்யா! தங்களது வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. கூந்தலை வைத்து திருவிளையாடலே
    நடத்தி இருக்கிறார்கள்...

    தங்களின் பார்வை அழகு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னாலும் முடிந்த சிறு விளையாட்டு நண்பரே!எனது பார்வையை ரசித்த தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்!

      Delete
  5. அடர்த்தியான...நீளமான தலைமுடி பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும்! இப்போதெல்லாம் அவற்றை அதிகம் பார்க்க இயலவில்லை எல்லோரும் குதிரை வால் அளவுக்கு குறைத்து வெட்டிக் கொள்கிரார்கள்! உங்கள் கவிதை அதனை நினைவு படுத்தியது!

    அருமையான ரசிக்க வைக்கும் கவிதை நண்பா! (TM 5)

    ReplyDelete
    Replies
    1. அந்த கொடுமை மட்டுமல்ல நண்பா! இன்னொரு கொடுமையும் இருக்கிறது. போகிற போக்கைப்பார்த்தால் "செம்பட்டை வானவில் v.2" என்று தலைப்புவைத்து கவிதை எழுதவேண்டும் போலிருக்கிறது. அவர்களுக்கு தெரியவில்லை.. ஆண்களின் நல்ல ரசனை "கருப்பு வானவிகளில்" உள்ளதென்று..

      தங்களது வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  6. Replies
    1. தங்களது மேம்பட்ட வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  7. அருமையான சிந்தனை சுப்ரமணியன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், உற்சாகமூட்டும் வரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா!

      Delete
  8. ஹா ஹா கருப்பு வானவில் தலைப்பே வித்தியாசம் நண்பா

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  9. அருமை அருமை. வித்தியாசமான உவமை. பாராட்ட வார்த்தையில்லை பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்! தங்களது அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பாஸ்!

      Delete
  10. இந்தப் பதிவு எனது டாஷ் போர்டில் வரவில்லையே?
    கூந்தலுக்கு வெவேறு விதாமான உவமைகள் சொல்லி இருக்கிறார்கள்.கருப்பு வானவில் புதுமையாக உள்ளது.நன்று நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவிற்கு மிக்க நன்றி நண்பரே! தங்களது Dashboardல் Reading Listல் என்னுடைய வலைப்பூ Hidden Blogs எனும் பிரிவில் வருகிறதா என பாருங்கள் நண்பரே! அப்படி இருந்தால் அதை சரி செய்யவும். அப்படியும் இல்லையென்றால் தண்ணீர்ப்பந்தலில் Un Follow செய்துவிட்டு, மீண்டும் Follow செய்யவும். தங்களது அன்புக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  11. அருமை. வித்தியாசமான உவமைமிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  12. கறுப்பு வானவில்கள் இப்ப்டியும் தெரிகிறதா என்ன?நல்ல சிந்தனை/

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா! தங்கள் வரவிற்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  13. நல்ல உவமை நண்பா !அருமை

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே! வெகு நாட்களுக்குப்பிறகு வருகை தந்திருக்கிறீர்கள். தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே! தங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!