Navigation Menu

எது காதல்?..


         காதல் என்பது என்ன? காதல் என்கிற ஒன்று உண்டா? இல்லையா? உண்மையா? பொய்யா? காதலால் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற பல கேள்விகள் இன்றுவரை விவாதங்களாக பரிணாமித்திருப்பதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இதில் தற்போது நாம் சிந்திக்க வேண்டியது, காதலால் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்பதை விட, காதலால் பாதிக்கப்படும் ஆண்களும், பெண்களுமான இளைஞர் சமூகத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இந்த மீட்டெடுப்பின்போது நாம் இன்னொன்றையும் செய்ய வேண்டும். அது என்னவென்றால், காதலுக்கு ஏற்பட்டிருக்கும் சில களங்கங்களை நீக்குவது. காதலுக்கு களங்கங்கள் யாரால் ஏற்ப்படுகிறது என்றால்.. அது.. காதலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் சில அப்பாவி இளைஞர்களால்தான்.
 
காதல், காதல் கவிதைகள், காதலர் தினம், காதல் தோல்வி



வாழ்க்கையில் சுயமாக காலூண்டுவதர்க்கு முன்பு (வாழ்க்கையைப்பற்றிய பல்வேறு சூழல்களை உணரும் முன்பு) அல்லது திருமணத்திற்கு முன்பு வரும் காதல்கள் காதலே அல்ல, அது வெறும் இனக்கவர்ச்சி மற்றும் ஆர்வக்கோளாறு, என்கிறது உளவியலும் மன நல மருத்துவமும். இதைக்கொண்டு பார்க்கும்போது, இனக்கவர்ச்சியும், ஆர்வக்கோளாரும் இணைந்த ஓர் உறவே, தன்னை காதல் என்று சொல்லிக்கொண்டு, உண்மையான காதலின் மகத்துவத்தை கெடுத்துவிடுகிறது. தவிர, இந்த உண்மையை உணராத இளைஞர் சமூகம் தங்கள் பொய்யான உறவின்பால் ஏற்ப்படும் இழப்புகளை, காதல் தோல்வி என்று சொல்லிக்கொண்டு, காதலுக்கும் கறையை ஏற்ப்படுத்தி, தங்களது அபார திறமைகளையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளமுடியாத வாழ்க்கைக்குள் விழுந்துவிடுகிறார்கள்.
 
காதல் தோல்வி, காதலர், காதலர் தினம், காதல், காதல் கவிதைகள்


இத்தகைய பொய்யான உறவு திருமணம்வரை செல்வதில்லை. அப்படியே சென்றாலும்கூட, அந்த திருமணத்தால் அவர்கள் மகிழ்ச்சியை வெகுநாட்கள் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளமுடிவதில்லை.
 
“பல நேரங்களில் காதல் திருமணத்தால்தான் தோல்வியடைகிறது”.
வெ.இறையன்பு.(ஓடும் நதியின் ஓசை)
 
காரணம், சரியான புரிந்துகொள்ளல் இல்லாமை. அல்லது புரிந்துகொல்லுதளுக்குமுன் அவசரப்பட்டு திருமணத்தை முடித்திருத்தல் என்பதுதான்.
 
மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி அவர்கள் தனது “டீன் ஏஜ் பிரச்சினைகள்” என்ற பாலியல் சம்பத்தப்பட்ட புத்தகத்தில் “காதலை அனுபவியுங்கள் ஆபத்தில்லை. ஆனால், கல்யாணம் என்ற அவசர முடிவுக்குத் தாவி விடாதீர்கள். அவதிப்படுவீர்கள்.” என்கிறார்.
 
நன்றாக சிந்தித்துப்பாருங்கள், வாழ்க்கை என்றால் என்ன? என்பதை உணரும் முன்னரே, வாழ்க்கைக்கான துனையை தேர்ந்தெடுத்திருந்தால், அது எப்படி சரியானதாக அமைய முடியும்? இந்த உண்மையை இளைய சமுதாயம் அவ்வாளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளாது. சில இளைஞர்கள், காதல் தோல்வி என்று சொல்லப்படும் சில இழப்புகளை அனுபவமாக எடுத்துக்கொண்டு, உண்மைகளையும், எதார்த்தங்களையும் உணர்ந்துகொள்கிறார்கள். பல இளைஞர்கள், இழப்புகளை அனுபவங்களாக மாற்றத்தெரியாமல் சோர்ந்து போகிறார்கள். இப்போது, இங்குதான் நமது செயல்பாடுகளை தொடங்கவேண்டும். இதை வாசித்துக்கொண்டிருக்கும் நாம், நிச்சயம் ஒரு ஆசிரியன், நண்பன், சகோதரன், அப்பா அல்லது அம்மா போன்ற இந்த உறவுகளில் ஏதேனும் ஒரு உறவாக இருப்போம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது மாணவனோ, நண்பனோ, சகோதர உறவோ, அல்லது உங்களது குழந்தைகளோ, இத்தகைய இழப்புகளால் மீளத்தெரியாமல் தவிக்கும்போது, சரியான ஆறுதலை சொல்லி, உண்மைகளை உணரவைத்து, அவர்களை சரியான பாதையில் செல்ல உற்சாகமூட்டுவதுதான்.

காதல் என்பது ஓர் உணர்வுதான், ஆனால், அனைத்து உணர்வுகளும் காதல் என்கிற ஒன்றுக்குள் அடங்கிப்போனதால்தான், காதல் என்கிற உணர்வுக்கு சற்று அதிகமான மதிப்பு கொடுக்கவேண்டியதாகிறது. இரும்பு மனம் கொண்டவர்களின் இதயங்களைஎல்லாம், இளகியோட வைத்தது காதல், என்று வரலாறுகளில் நாம் காண்கிறோம்.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
- குறுந்தொகை
என்ற இலக்கிய வரிகளைகொண்டு நன்றாக சிந்தித்துப்பார்த்தால்.. எங்கோ பிறந்த ஒரு ஆணும், எங்கோ பிறந்த ஒரு பெண்ணும், தங்களுக்குள் எந்தவித ரத்த பந்தமில்லா ஒரு உறவாக இருக்கும்போது, அவர்களுக்குள் ஏதேனும் ஒன்றும் நேரும்போது, துடிதுடித்துப்போகும் அந்த உறவு, வெறும் காமத்திற்க்காக மட்டும்தான் ஏற்படுகிறது என்று சொன்னால், அதனை விட மடமை வேறு இல்லை. ஆணென்றும் பெண்ணென்றும் படைத்த, இயற்கையின் படைப்பை அதிசயத்துடன் பார்க்கும் நாம், எப்படி அதை விளங்கிக்கொள்ள முடியாதோ, அதேபோலத்தான் காதலையும் விளங்கிக்கொள்ள முடியாது. ஆனால், உண்மையாக அன்பு செலுத்துபவராக இருந்தால், அதை உணரமுடியும். காதலால் ஏற்பாடும் உறவு, புனிதமானது,தெய்வீகமானது என்பதை விட, அது அத்தனையையும்விட மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்.

காதல் தோல்வி, காதலர், காதலர் தினம், காதல், காதல் கவிதைகள்


இப்படிப்பட்ட காதலை களங்கப்படுத்தும் ஒருவராக நமது அன்புக்குரியவர் இருந்துவிட வேண்டாம். மாறாக, இந்த உலகம் எப்படிப்பட்ட இளைஞர்களை எதிபார்க்கிறதோ, அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவராக, அவர்களை நாம் உருவாக்குவோம்!. அவர்களை, அவர்களே மாயையான ஒரு புள்ளிக்குள் அடக்கி சிறைபடுத்திக்கொள்வதை நாம் அனுமதிக்க வேண்டாம்! மாபெரும் உலகம் அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. வாருங்கள்! அவர்களின் பார்வையை கொஞ்சம் கதவுகள் இருக்கும்பக்கத்தை தேடி திருப்புவோம்!.
 
அவர்களின் விலைமதிப்பில்லா திறமைகளை, மாயையான உறவுக்கு வீணாக்கும் அந்த நொடியில், இந்த உலகிற்கும் அவர்களுக்குமான ஆக்கபூர்வமான எவ்வாளவோ செயல்களுக்காக அவர்களின் திறமைகளையும், அந்த நொடிகளையும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
 
கற்பனையான துன்ப உலகை விட்டுவிட்டு, எதார்த்தத்த வாழ்க்கைக்கு அவர்களை பயனப்படுத்துவோம்!. அவர்கள், அவர்களுக்கும் இந்த உலகிற்குமாக செய்ய வேண்டியவை ஏராளமானவையாக இருக்கிறது. நாம் அவர்களுக்கு அவர்களின் பொறுப்பை உணரவைக்க வேண்டிய நேரமிது.



இறுதியாக ஓன்று. நாம் செய்யப்போகும் இந்த செயலால், நமது அன்புக்குரியவரை மட்டும் மீட்டெடுக்கப்போவதில்லை. ஒரு உறவை புனிதப்படுத்தப்போகிறோம், பள்ளத்தில் விழுந்து தவிக்கும் இந்தியாவை கரம் கொடுத்து தூக்கி நிமிர்த்தப்போகிறோம். இதற்காக இந்தியா உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

                                                                                                  வே.சுப்ரமணியன்.


11 comments:

  1. thank you for you information. all the best

    ReplyDelete
  2. மிக்க நன்றி! கருத்துரையிட்ட உள்ளங்களுக்கும், வாக்குகள் மூலம் ஆதரவளித்த உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  3. காதல் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், வெறும் உடல் கவர்ச்சியாக முடிந்துவிடக்கூடாது என்ற அக்கறையோடு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அவ்வகையில் பாராட்டுகள்.

    ஆனால், காதல் களங்கப்படுவது அதை சரியாகப் புரிந்துகொள்ளாத இளைஞர்களால்தான் என்ற கருத்து, காதலை ஏற்க மறுக்கிற பழமைவாதிகளின் குரலாக இருக்கிறது. காதலுக்கு இங்கே எத்தனையோ தடைகள். முதல் தடை சாதி. இரண்டாவது தடை மதம். அப்புறம் பொருளாதாரம், பதவிநிலை, கல்விநிலை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. எல்லோரும் காதலுக்கு ஆதரவாளர்கள்தான், அவரவர் வீட்டில் நடக்கும் வரை என்றார் ஒரு கவிஞர். சாதியின் கோரமான பிடியில் இருநது நம் சமுதாயம் இன்னும் விடுபடவில்லையே... காதலிப்பவர்களால் தங்களது சமூக மரியாதை குலைந்துவிட்டது என்று பதறுகிற பெரியவர்கள்தானே நம் சமுதாயத்தில் பெருமபான்மையாக இருக்கிறார்கள்? நமது புராண, சங்க இலக்கியங்கள் கூட ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதல் பற்றித்தான் அதிகமாகப் பேசுகின்றனவேயன்றி, சாத வரப்புகள் தாண்டிய காதல் பற்றிப் பேசுவது மிகக் குறைவு.

    காதல் திருமண்ங்களே நம் சமுதாயத்தில் மிகக் குறைவான சதவீதம்தான். அதிலே, காதல் திருமணங்களில்தான் விவாகரத்து அதிகம் என்று இணையன்பன் சொல்வது சரியல்ல. ஜாதகம், சாதிப்பிரிவினை, மதவேறுபாடு, அந்தஸ்து வேறுபாடு என அனைத்தையும் உடைத்து நொறுக்கும் வல்லமை உடைய காதலுக்கு மரியாதை செலுத்துவதும் அதை வளர்ப்பதுமே இன்றைய சமுதாயத் தேவை.

    பாலினக் கவர்ச்சி இல்லாத காதல் என்பதெல்லாம் வெறும் மாயை. பாலினக்கவர்ச்சியும் கலந்த மனங்களும் இணைந்த உறவே நல்ல காதல். பலர் வெறும் பாலினக் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி பின்னர் ஏமாறுகிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள். அதற்குக் காரணம் பாலியல் கல்வி இன்னும் நம் கல்விக் கூடங்க்ளில் எட்டிப்பார்க்காததும், சமுதாயத்தில் அதைப் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடல்கள் இல்லாததும்தான். அவற்றைத் தொடங்குவோம்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி வண்ணக்கதிர் அவர்களே! எனது தவறுகளை சுட்டிகான்பித்ததற்க்கு மிக்க நன்றி! பாலியல் கல்வியினை வலியுறுத்தாதற்கு வருந்துகிறேன். இக்கட்டுரையின் நோக்கம், இளைய சமூகத்தை நல்வழிப்படுத்துவதும், காதலுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்குவதுதான். சாதியத்துடனான சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, காதல் என்ற ஒன்றைக்கொண்டுதான் சரிசெய்ய முடியும் என்பதில்லை. அது சாதியம் என்ற அமைப்பு முறைக்கு எதிராக, இளைஞர்களை, காதல் என்கிற ஆயுதத்தை கொடுத்து தூண்டிவிடுவது போலாகும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்கள்தான் என்றாலும்கூட, மறைமுகமாக நாம் மனிதவள ஆற்றலை இழந்துகொண்டிருக்கிறோம்.சாதியத்தையும்,மற்றும் பல ஏற்ற தாழ்வுகளையும் அகற்ற மாற்று வழிகள் பல உள்ளன.கலப்பு திருமணங்கள்தான் இதற்க்கு தீர்வு என்றால், நாம் ஏன் சுயமரியாதை திருமணங்களுக்கு ஆதரவு தர மறுக்கிறோம்? சிந்திக்கவும் செயல்படுத்தவும் வேண்டிய கேள்வி இது.(இந்த கேள்விக்கு விடையாக காதலையும் இளைஞர்களையும்த்தான் கை நீட்டுவோமே ஒழிய, நமது குடும்பத்திலிருந்து தொடங்க பெரியவர்களான நாம் முன்வருவது கடினம்தான்.) சமூகத்தில் சாதியத்தையும், சமூக ஏற்ற தாழ்வுகளையும் தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை எதிர்த்து போராடிய தந்தை பெரியார்கூட காதல் என்கிற கோட்பாட்டிற்கு ஆதரவு தரவில்லை என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது.

    ReplyDelete
  5. //வாழ்க்கை என்றால் என்ன? என்பதை உணரும் முன்னரே, வாழ்க்கைக்கான துனையை தேர்ந்தெடுத்திருந்தால், அது எப்படி சரியானதாக அமைய முடியும்?//

    நிதர்சனமான வரிகள்...

    பல இளைஞர்கள் காதல் என்கிற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு "சினிமா" பெரும் பங்கு வகிக்கிறது.

    ReplyDelete
  6. @விஜயன் மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அருமையான பதிவுகள்...நேரமிருந்தால் www.ellameytamil.com தளத்திற்கும் வரவும்...உங்கள் வரவை எதிர்நோக்கி அன்புடன் கவிமாபு...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு நன்றி நண்பரே! தங்களது பல்சுவை தளத்திற்கு வந்தேன். அருமை! தொடருங்கள்! நன்றி நண்பரே!

      Delete
  8. காதல் பற்றி கூறிய குறுந்தொகைப் பாடல் அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நட்பே!

      Delete
  9. காதலைப்பற்றி வைரமுத்துவின் வரிகள்;

    அன்புமட்டுமே காதல் என்றால் அதை நீரூபிக்க ஒரு நாய்குட்டிபோதும்
    பாலுணர்வு மட்டுமே காதல் என்றால் அதை நீரூபிக்க ஒரு விலைமகள் போதும்
    காதல் என்பது இரண்டும் பின்னி ஜடை போட்டுக்கொள்ளும் சம்பவம்

    பாலூணர்வும் அன்பும் சந்தித்து கொள்ளும் புள்ளியே காதல்

    காதலுக்கும் எனக்கும் வெகு தூரம் சாமியோவ்

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!