Navigation Menu

ஒரே ஒரு மொழி கல்!


நட்சத்திரங்கள்
கீழே விழுந்து
சிதறிப்போய்விட்டால்...

இந்த எழுத்துக்கள்
எழுந்து வந்து
உன் கை பிடித்து
நடந்தால்...

காளிநேர பனித்துளி, புல்லின்மேல் பனித்துளி, பனித்துளி கவிதைகள்
அப்போதுதான்
கண் விழித்து
சோம்பல் முறிக்கும்
புல் மெத்தையிலிருந்து
பனித்துளி எழுந்து
சண்டைக்கு வந்தால்...

காவியமும் ஓவியமும்
உனது மானுட எல்லையை
உடைத்தெறிந்துவிட்டால்...


பறக்கும் பறவை
ஓங்கி உன் கன்னத்தில்
அறைந்துவிட்டுச்சென்றால்...

எறும்புகள்
பேசிக்கொள்வது மட்டுமே
உன் காதுகளில் விழுந்தால்...

மானுட உலகின்
மொத்த ஓசைகளும்
உன் காதுகளுக்குளிருந்து
துடைத்தெறியப்பட்டுவிட்டால்...

என்ன செய்வாய்
மானுடனே!
இயற்கையின் மொழியை
கற்றுக்கொண்டுதானே
ஆகவேண்டும்?

கற்றுக்கொடுக்க
தயாராய்..
எம் மண் துகள்கள்.

கற்றுக்கொள்ள
எப்போது தயாராகும்
உன் மனத்தூசிகள்?                                                                                        வே.சுப்ரமணியன்.






 

4 comments:

  1. மண் துகள்களும்
    மனத் தூசிகளும் ..
    அருமை தோழரே....

    ReplyDelete
  2. @தென்காசித் தமிழ்ப் பைங்கிளி ஆழ்ந்த வாசிப்பிற்கு மிக்க நன்றி தோழமையே! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  3. வார்தைகள் ஏதும் இல்லா இயற்கையின் மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,ஆனால் நம் வார்த்தைகள்(மொழி) நம் புரிதலை தடுத்து விடுகிறது.நல்ல கவிதை நன்பரே !

    ReplyDelete
  4. @kavithaicorner மிக்க நன்றி நண்பரே! ஆழ்ந்த வாசிப்பிற்கும், தங்களது வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!