Navigation Menu

முரண்பாடுகள்!


நாய்கள் ஜாக்கிரதை!
வாசலில் தொங்கும் எச்சரிக்கை பலகை.
இங்கு..
நாய்கள் என்பது யார்?





 
+18 மட்டும்!
வயது குறைந்தவர்கள் உடனே வெளியேறவும்!
எத்தனை பேர் வெளியேற்றப்பட்டோர்?




அழகின் முன்
அவலத்தை சேர்க்கும் போது..
திருஷ்டி தீண்டாது. எனும் நோக்கில்
வீட்டை விட
அழகான
திருஷ்டி பொம்மை.

ஆ! எவ்வளவு அழகான திருஷ்டி பொம்மை!
திருஷ்டி பொம்மைக்கு
திருஷ்டி கழிக்க
என்ன செய்வது?





படித்துப்பார்த்தேன், படிக்க கேட்டேன்.
கைநாட்டு வைக்கும்
கருப்பையா.
எதை படிக்க கேட்டார்?






நடத்துனரின் ஓயா மந்திரம்.
டிக்கெட், டிக்கெட்,
வண்டில யாரும் சீட் வாங்கவேண்டி இருக்கா?
தம்பி டிக்கெட்?..
பேருந்தினுள் வாசகம்.
பயணசீட்டை கேட்டு பெறவும்.
யாருக்கு இந்த அறிவுறுத்தல்?





விளக்கங்கள் கேட்க
வாய் திறக்க முடியா என்னை,
பெரும் சூளுரைகளுக்கு
வித்திட்டு என்ன பயன்?

வே.சுப்ரமணியன்.                                                           







19 comments:

  1. அன்றாடம் கண்ணில் படுகிற முரண்களை மிக அழகான
    கவியாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    வித்தியாசமான பார்வை
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. விளக்கங்கள் கேட்டால் வினையாகி விடுமே .....
    நகைச்சுவையான சிந்திக்கத் தூண்டும் பதிவு.

    ReplyDelete
  3. எளிமையான கவிதை! தரமான பதிவுகள்! வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  4. //திருஷ்டி பொம்மைக்கு
    திருஷ்டி கழிக்க
    என்ன செய்வது?//
    சபாஷ்! சரியான கேள்வி!

    ReplyDelete
  5. @Ramani தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  6. @ஸ்ரவாணி சரியாக சொன்னீர்கள் ஸ்ரவாணி, தங்களது வருகைக்கும், கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி!

    ReplyDelete
  7. @தமிழ் உதயம் தங்களது தொடர் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  8. @எம்.ஞானசேகரன் மிக்க நன்றி நண்பரே! தங்களது வருகைக்கும், மதிப்பீடுகளுக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே! தங்களது தொடர் வருகையை எதிர்பார்க்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  9. @சென்னை பித்தன் மிக்க நன்றி அய்யா! தங்களது தொடர் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் மிக்க
    நன்றி அய்யா!

    ReplyDelete
  10. கவிதைகள் அருமை.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. விளக்கங்கள் கேட்க
    வாய் திறக்க முடியா என்னை,
    பெரும் சூளுரைகளுக்கு
    வித்திட்டு என்ன பயன்?//எளிமையான கவிதைஅருமையான பதிவு...

    ReplyDelete
  12. @கோவி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. @மாலதி தங்களின் புரிதலுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  14. இதற்குப் பின் ஏன் எதுவும் எழுதவில்லை? நேரமின்மையா?

    ReplyDelete
  15. @sasikala தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  16. @சென்னை பித்தன் மன்னிக்க வேண்டும் அய்யா. கற்றலில் அதிக நேரம் செலவிட்டதால், நேரமின்மை ஏற்ப்பட்டு விட்டது. எனது தாமதங்களை உணர்த்தியதற்கு மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  17. நல்ல சிந்தனை முரங்களின் தொகுப்பு,முரன்பாடுகளின் தொகுப்பு தானே வாழ்க்கை...

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!