ஒவ்வொரு கலைஞனும் தனது
கலைப்படைப்பிற்கு பலனாக, கோடி கோடியாக பணத்தையோ அல்லது பொன்னையும் பொருளையுமோ
எதிர்பார்ப்பதில்லை. மாறாக, யாரேனும் ஒருவரிடமிருந்து வரும் “நல்லாருக்கு” எனும்
ஒரே ஒரு சிறிய வார்த்தை போதும், அது, எவ்வளவு பொன்னையும் பொருளையும் கொடுத்தாலும்
பெற்றுத்தராத மகிழ்ச்சியை, அந்த ஒரு சிறிய வார்த்தை பெற்றுத்தரும். தற்போது தமிழ்
பதிவுலகமும் இது போன்ற மகிழ்ச்சிகளை, இல்லை இதை விட மிகப்பெரிய மகிழ்ச்சிகளை
பரிமாறிக்கொண்டு வருகிறது. இது விருதினை பகிர்ந்து கொள்வது, எனும் முறையில்
தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் விருது பெரும் ஒவ்வொரு பதிவனும்,
தான் செல்லும் பாதையில் அசைக்க முடியா நம்பிக்கையுடன், கம்பீர நடைபோடுகிறான்.