ஒரு அழகிய கிராமத்தில், கடவுளை மிகவும் பயபக்தியோடு வணங்கும்
ஆத்திகவாதியும், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியும் இருந்தனர். ஆத்திகவாதி
மக்களை சந்திக்கும்போதெல்லாம், கடவுளின் பெருமைகளை மணிக்கணக்கில் எடுத்துக்கூறுவார்.
அதைக்கேட்டு மக்களும், ஆமாம்! ஆமாம்! கடவுள் இருக்கிறார். என்று தங்களுக்குள் கூறிச்செல்வர்கள்.
அதே போல், நாத்திகவாதி மக்களை சந்திக்கும் போதெல்லாம், “கடவுள் இல்லை, அறிவியலை பாருங்கள்”
என்று இவர் போதிப்பார். உடனே மக்களும், ஆமாம்! ஆமாம்! கடவுள் இல்லை, என்று தீர்மானித்துவிடுவார்கள்.
ஏனென்றால், அவர்கள் வாதத்தில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு
கருத்தும் நம்பும்படியாக இருக்கும். இந்த செயல் தொடர்ந்து
நடந்துகொண்டிருந்தது. ஆத்திகவாதியும் நாத்திகவாதியும், மாறி மாறி போதனை செய்தனர்.
காலப்போக்கில், மக்கள், குழம்பிப்போனார்களோ அல்லது தெளிவடைந்தார்களோ தெரியவில்லை.
ஆனால் அவர்கள், இவர்களிருவரையும் பிடித்து, “இந்தா பாருங்கப்பா, நீங்க பாட்டுக்கு
தனித்தனியே வந்து, நீ ஒன்ன சொல்ல, அவன் ஒன்ன சொல்ல, எங்கள நல்லா கொழப்பிட்டு
போறீங்க. எங்களுக்கு தேவை ஒரு தெளிவான முடிவு” என்று சொல்லி, அவர்களிருவரையும் ஒரே
இடத்தில் வாதாடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். விவாதமும் நடந்தது.... நடந்தது....
நடந்துகொண்டேயிருந்தது. அனல் பறக்கும் விவாதம், காலையிலிருந்து மாலையும் ஆயிற்று.
மக்கள் மிக ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். ஒருவழியாக விவாதம் முடிவுக்கு
வந்தது. எப்படியெனில், ஆத்திகவாதி, தான் கற்ற வேத புத்தகங்கள் மற்றும் கடவுளுக்கு
பூஜை செய்யும் உபகரணங்களையும் அனைத்தையும் தீயிலிட்டு எரித்துக்கொண்டிருந்தான்.
இங்கு நிலைமை இப்படியென்றால்.. மற்றொரு பக்கம், கடவுளே! என்னை மன்னித்துவிடு,
உன்னைப்போய் பழித்துவிட்டேனே! என்று கூறி, நாத்திகவாதி கடவுளை வணங்கி தரையில்
உருண்டுகொண்டிருந்தான். இவனுடைய கருத்துக்களை கேட்டு அவன் மாறினான். அவனுடைய
கருத்துக்களை கேட்டு இவன் மாறினான்.
ஆகவே நண்பர்களே! கடவுள்
இருக்கிறாரா? இல்லாயா? என்ற ஆராய்ச்சி வீணானது. மாற்றாக, கடவுள் இருக்கிறாரா?
இல்லையா? என்பதைவிட இருக்கும் யாவற்றையும் கடவுளாக பார்ப்பது என்பதுதான், நாம்
மனிதனாக மாறுவதற்கான வழி.
"இருக்கும் யாவற்றையும் கடவுளாக பார்ப்பதா?"
"அது எப்படி சாத்தியம்?"
"அது எப்படி சாத்தியம்?"
"அப்படியெனில் கடவுளும் கத்தரிக்காயும் ஒன்றா?"
"ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? என்ற இந்த கேள்விகளுக்கு இப்போது பதிலை காண்போம்.
அறிவியலாளர்களும் ஆண்மிகவதிகளும் கடவுள் என்கிற கோட்ப்பாட்டில்
எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் இவர்கள் இருவருமே ஒரு கருத்தில்
ஒத்துப்போகிறார்கள். மிகப்பெரும் அறிவியல் மேதைகளான, டார்வின், லமார்க், ஹ்யூகோ
டீவிரிஸ் போன்ற, உயினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்த அறிவியலாளர்கள் சொல்வதேல்லாம், “உலகில் முதன் முதலில் தோன்றிய ஒரே ஒரு
உயிரினத்திலிருந்துதான், இன்று பல்வேறு உயிரினங்கள் பரிணாம
வளர்சிகளுக்குட்ப்பட்டு, பல்கிக்கிடக்கின்றன.” ஆன்மிகத்தில் கறை கடந்த,
பெளத்தத்தின் பிட்சுகள், இஸ்லாமியத்தின் சூஃபிகள், இந்துவின் முனிவர்கள், இவர்கள்
யாவரும் சொல்வதெல்லாம், “ஆழ்ந்த விழிப்புனர்சியின் வழியாக, சூன்யத்தின் வழியாக
நம்மை நாமே உள்நோக்கிப்பார்த்தால், நாம் கடவுளின் ஒரு பகுதி என்பதை உணரமுடியும்.
அப்படி உணர்ந்துவிட்டால், நாம் மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள அனைத்தும் கடவுளின்
பகுதி என்பதை உணரமுடியும்.”அதனால்தான் புத்தர்கூட தன்னை தாக்கியவனைப்பார்த்து புன்முறுவல் காட்டினார். சீடர்கள் காரணம்
கேட்டபொழுது, “அவன்தான் நான், நான்தான் அவன். அப்படியிருக்க, என்னை நானே எப்படி
அடித்துக்கொள்ள முடியும்” என்று சொன்னார்.
உண்மையான ஆத்திகவாதி ஆன்மிக கண்ணோட்டத்திலும், உண்மையான நாத்திகவாதி
அறிவியல் கண்ணோட்டத்திலும் ஆழ்ந்து சிந்திதுப்பார்த்தால், எதிரே இருக்கும்
கணிப்பொறியும் நாமும் ஒன்றுதான் என்பதை, உணரமுடியும். அப்படி உணர
முடியவில்லையென்றால், நமது முழுமையில் குறை இருக்கிறதென்று அர்த்தம். நமது
முழுமைக்கு எது தடையாக இருக்கிறதென்றால், நமது வழிபாட்டு முறையில் இருக்கிற
குறைகளும், மதங்களின் உண்மை தத்துவங்களை உணராமல் அதை வெறும் விவாத்தத்திற்க்குரிய
ஒன்றாக எடுத்துக்கொள்வதும்தான்.
கடவுளா? கத்தரிக்காயா? என்ற இந்த கேள்வி சமூகத்தில் உலவுவதற்கு
காரணமே, ஒரு வெங்காயம்தான்(!) அந்த கேள்வியை உலவ விட்டதற்கு காரணம், கடவுள்
பெயரைச்சொல்லி பல சமூக ஏற்றதாழ்வுகள் உருவாகியிருந்ததுதான். மனிதனை மனிதன்
அடிமைப்படுத்துவதற்கும், பல வேற்றுமைகளை மனிதனுக்குள் உருவாக்கிக்கொள்வதற்கும், பல
பிரிவினைகள் ஏற்படுவதற்கும், கடவுளும் மதங்களும் காரணமாக இருந்தன என்பதுதான்.
இதெற்கெல்லாம் மூல காரணம் எதுவென்று பார்த்தால், மனிதனின் ஆன்மிக வழிபாட்டில் உள்ள
குறைபாடுகளும், மதங்களைப்பற்றிய தவறான புரிதல்களுமாகும்.
வழிபாடு என்பது கடவுளும் மனிதனும் நேரிடையாக பேசிக்கொள்ளும் ஒரு
செயல். “இதுவரை யாவற்றையும் எனக்கு கொடுத்த உனக்கு எனது நன்றி!” என்று கடவுளிடம்
மனதார சொல்லும்போது அதுதான் தியானம். தியானம் என்பது மனதை கட்டுப்படுத்துவது, மன
அழுத்தத்தை குறைப்பது, மனதின் சக்தியை, மனிதனின் சக்தியை(அறிவியலில் இது ஆற்றல்)
முழுமையாக பயன்படுத்தச்செய்வது. ஆனால் இது
தடம் மாறி, கடவுளுக்கும் நமக்குமான ஒப்பந்தம் என்ற நிலையில் இருக்கும் போதுதான்,
ஆன்மிகம் அடிபட்டுப்போகிறது, மூட நம்பிக்கைகள் தொடர்கின்றன, சமூக ஏற்ற தாழ்வுகள்
நிகழ்கின்றன. எப்போது நேர்த்திக்கடன் நன்றிக்கடனாகிறதோ, அப்போதே வழிபாடு
சிறக்கும்.
அனைத்து மதங்களும் உணர்த்துகிறது, அன்பே கடவுள் என்று.
ஆண்மிகவாதிகளும் நாத்திகவாதிகளும் தங்களது கருத்துக்களில் முரண்பட்டு நின்றாலும்,
அன்பு என்கிற கருத்தில் அவர்களிருவரும் ஒத்துப்போகிறார்கள். ஆத்திகவாதியோ
நாத்திகவாதியோ, யாரோருவரும் அன்பு என்கிற ஒன்றை புறந்தள்ள முடியாது.
ஆத்திகவாதிக்கு மட்டுமோ, அல்லது நாத்திகவாதிக்கு மட்டுமோ, அன்பு சொந்தமானதல்ல. அது
ஓவ்வொரு உயிருக்கும் இருக்கும் அடிப்படை குணம்.
நாம் உணவருந்திக்கொண்டிருக்கும்போது, பசியால் பரிதாபமாக நம்மையே
பார்த்துக்கொண்டிருக்கும், நாய்க்குட்டிக்கு, அதன் பசியை போக்கிப்பருங்கள். அந்த
நாய்க்குட்டி பசியாருவதை பார்க்கும்போது அன்பு நமக்குள் எவ்வளவு நிறைந்துள்ளது
என்பதை நாம் நன்றாக உணர முடியும்.
தாயின் உதிரத்திலிருந்து நாமும் நம் சகோதரர்களும் தோன்றியது போலதான்,
ஒரு உயிரிலிருந்து பல்லுயிர்களாக பிறப்பெடுத்திருக்கிறோம். நன்றாக
சிந்துத்துப்பார்த்தால், நமது அன்னையிடமும், உடன்பிறந்த சகோதரனிடமும் செலுத்தும்
அன்பை, நாம் ஒவ்வொரு உயிரினத்திடமும் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
எதிரே செல்லும் ஆட்டுக்குட்டியும் நாமும் ஒன்றுதான். புல்லும் மரமும்,
அணிலும் வயலும், நண்பனும் துரோகியும், கடவுளும் கத்தரிக்காயும் எல்லாமே ஒன்றுதான்.
யாவையும் நம் உடன் பிறந்தவர்கள்தான்.
அன்பு செலுத்துவதை கடமையாக கொள்வோம்! யாவரையும் மன்னிப்போம்! உங்களுக்கு
எதிரே இருக்கும் உங்கள் எதிரியை பாருங்கள்! புத்தர் சொன்னதைப்போல நீங்களும் அவரும்
ஒன்றுதான். உங்களது கூடப்பிறந்தவரிடம் செலுத்தும் அன்பை அவரிடமும் காட்டுங்கள்.
அவரிடமட்டுமல்ல இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திடமும் நமது அன்பு
வெளிப்படட்டும்! அப்படி செய்யும்போது, நாம் கடவுளை தரிசிக்கவும் உணரவும் வெகு
நேரம் ஆகிவிடாது. இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொன்றையும் அன்பு எனும் கண் கொண்டு
பாருங்கள்! கத்தரிக்காயிலும் கடவுள் தென்படுவார்!
வே.சுப்ரமணியன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபெயரிலி ஒருவரின் கருத்துரை ஆபசமானதாகவும், பிறர் மனங்களை புண்படுத்தும் வகையில் இருந்ததால், அந்த கருத்துரையை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறோம். எனினும் அவர் தனது கருத்துரையின் வாயிலாக சில கேள்விகளுக்கு விடை கூறுமாறு கூறியிருந்தார். எனவே, அவர் தனது முகம் காட்டுவாராயின் அவரது கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க ஆர்வமாயிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகைய செயலால், பெயரிலிகள் கருத்துரையிடும் வசதியை இன்றிலிருந்து அகற்றுகிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அவரது வருகைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி!
ReplyDeleteமிகவும் எளிமையான நடையில், கருத்தாழமுள்ள பதிவு.
ReplyDeleteatchaya தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரரே!
ReplyDeleteஇன்று தான் தங்கள் தளம் வந்தேன். ..
ReplyDeleteஅன்பினால் இவ்வுலகை ஆளலாம்..
மன்னிக்கும் மனப்பான்மையை வளர்ப்போம்
எவ்வளவு பெரிய விஷயங்களை அழகாக
சொல்லிவிட்டீர்கள்..
கைதட்டல்கள் நண்பரே...
@மகேந்திரன்தங்களது கைதட்டல் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது நண்பரே! தொடர்ந்து தங்களது வரவை எதிரபார்க்கிறேன். நன்றி நண்பரே!
ReplyDeleteஆழமான ஆய்வு தம்பி..
ReplyDeleteவிரும்பிப் படித்தேன்.
@முனைவர்.இரா.குணசீலன் தங்களால் நான் மேலும் மேலும் உற்சாகமடைகிறேன் அண்ணா! தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அண்ணா!
ReplyDeleteஆழ்ந்த கருத்துக்கள்,நல்ல எழுத்து நடை,
ReplyDeleteநன்பா தங்களின் வாசிப்பின் ஆழமும் ,நேசிப்பின் புரிதலும் தங்கள் எழுத்தில் தெரிகிறது....
வாழ்த்துக்கள்.
தங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியுமா?
@விஜயன் தங்களது வருகையாலும், கருத்துரையாலும் நான் மேலும் உற்சாகமடைகிறேன் நண்பரே! நான் தங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். அதையே தாங்கள் என்னுடைய தொடர்பு முகவரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு மின்னஞ்சல் கிடைக்கப்பெறவில்லையெனில், நமது தளத்தின் மேற்பகுதியில் உள்ள “தொடர்புகொள்ள..” எனும் விசையினை அழுத்துவதன் மூலம் நாம் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteஎளிய விளக்கம்.நல்ல எழுத்து நடை.
ReplyDelete@மழைதூறல் தங்கள் வருகைக்கும் மேம்பட்ட கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா!
ReplyDeleteநல்ல பதிவு.பலருடைய மனத்தைக் கவர்ந்திருக்கிறது உங்கள் பதிவு.சென்னைபித்தன் 2011 இல் கலக்கிய பதிவர்கள் பட்டியலில் உங்களையும் சேர்த்திருப்பதற்கு வாழ்த்துக்கள். அந்தப் பட்டியலில் என்னையும் இணைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பொங்கல் வாழ்த்துக்கள்.வாழ்க!வளர்க!
ReplyDelete@Rathnavel தங்களது வாழ்த்துக்களை நான் ஆசீர்வதமாக பெற்றுக்கொள்கிறேன் அய்யா! தங்கள் வருகைக்கும் ஆசீர்வதங்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
ReplyDelete@T.N.MURALIDHARAN 2011ல் கலக்கிய பதிவர்கள் என்ற ஒரு புள்ளியில் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம். (நம்மை பெருமைப்படுத்தி, நம்மை இணைத்த சென்னை பித்தன் அய்யா அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்) இந்த பெருமைகளை நாம் தக்கவைத்துக்கொள்ள நாம் இதை விட அதிகமாகவே உழைக்க வேண்டும். தங்களது பதிவுகள், தங்களது சிறப்புகளையும் உழைப்பையும் தாங்கி நிற்கின்றது. இனி வரும் காலங்களில் நமது உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு, மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete2011ல் கலக்கிய பதிவர்கள் என்ற வரிசையில் என்னையும் ஒருவனாக சேர்த்து, நான் எழுதிய இந்த கட்டுரையையும் என்னையும், வலைச்சரத்தின் மூலம் பெருமைப்படுத்தி, உற்சாகப்படுத்திய அய்யா! சென்னை பித்தன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை, எவ்வழியிலாவது செளுத்திவிட முடியுமா? என்று காத்திருக்கிறேன். மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteஅன்பு செலுத்துவதை கடமையாக கொள்வோம்! யாவரையும் மன்னிப்போம்!
ReplyDeleteஅருமையான கருத்துகள் .பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்மா!
Delete