Navigation Menu

தயவுசெய்து மன்னிக்கவும்!

       "அம்மா, சீக்கிரமா வா! அவனுங்கள ஒரே நசுக்கா நசிக்கிரலாம். நாம போறதுக்குள்ள அவனுக, இடத்தை காலி பண்ணிட்டு ஓடினாலும் ஓடிடுவாணுக". சொல்லிக்கொண்டே இங்கும் அங்கும் அவசரத்தில் ஓடுவதும் ஒடியாரதுமாக இருந்தது அணில் குட்டி
.
அணில், அணில் குட்டி, அணில்கள்,


*   "அடேய்! இருடா. அப்பன மாதிரியே...!" "இப்ப என்ன நடந்திருசின்னு உன் வாலை இப்படி முறிக்கிக்கிட்டு நிக்கிறே?" (இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னு தெருஞ்சிருக்கும்.)
 
*       "அதெல்லாம் முடியாது. பேச்சுக்கெல்லாம் இந்த சின்டு! (அவரது பெயராக்கும்) இடந்தர மாட்டான். ஒரே நசுக்குதான். இப்போ நீ வர்றியா இல்லையா?"
 
*   "நீ என்னன்னு சொன்னா, அம்மா உன்கூட வருவேணாம், இல்லைனா வரமாட்டேனாம்." (அன்பான வார்த்தைகளில் கொஞ்சம் அடங்கித்தான் போனான் சின்டு).
 
*        "சொன்னா கண்டிப்பா வருவெல்ல?"
 
*         "வர்றேண்ட செல்லம், என்ன நடந்திசின்னு சொல்லு."
விளையாடும் அணில் குட்டி, அணில் அனிமேஷன்கள்

*       "நாம வீட்டுக்கு கீழ (மரத்துக்கு கீழே) புதுசா குடி வந்திருக்கிரானுகளே அவிங்க....."
 
*       "யாருடா?"
 
*    "அதாம்மா! அவனுக இங்க கூட்டம் கூட்டமா குடி வர்ற அன்னிக்கு, அவனுக மொத்தம் எத்தனை பேருன்னு நான் எண்ணுனேன்ல, நீ கூட எனக்கு சரியா எண்ண வரலேன்னு திட்டுனியே!"
 
*       "அடேய்... அந்த எறும்புகளையா சொல்றே?"
 
*   "எறும்போ கரும்போ... அந்த புல்டோசர் மண்டயங்க என்ன செஞ்சாங்கே தெரியுமா, நான் சும்மா வீட்டுக்குள்ளே இருக்கக்கூடாது, வெளில வாக்கிங் போயி! நாலு விசயத்த கத்துகிட்டு வரலாமின்னு!, நம்ம வீட்ட விட்டு கீழ இறங்கி போனா..... அவிங்க எல்லாரும், எங் காள கடிக்கிராணுக.! என் காள் நகம் அளவு இருந்துக்கிட்டு.., அதுவும், நம்ம வீட்டுக்கு கீழ இருந்துகிட்டு...., அதுவும் என்னையவே..... அதுவும்....!."
 
*  "டேய் நிறுத்துடா. (நாட்டமை ஸ்டைல்) நீ அவங்க வீட்டுப்பக்கம் போயிருப்ப. உன் காள் பட்டு அவங்க வீடு பாதிப்படஞ்சிருக்கும், அதனால அவுங்க “கொஞ்சம் பாத்து நாங்களும் இங்க இருக்கோம்”னு உனக்கு தெரியப்படுத்த அப்படி செஞ்சிருப்பாங்க."


எறும்புகளின் குறுப்பு படங்கள், வேலைசெய்யும் எறும்புகள்.

* "அதுக்காக கடிக்கிறதா? இத்தோபெரிய வாய வெச்சுகிட்டு நானே சும்மயிருக்கேன். சின்னூண்டு வாய வெச்சுகிட்டு அவிங்க இவ்வளவு ஆட்டம் போடா கூடாது."
 
*   "அப்படி இல்லடா செல்லம். அவங்க பேசுறத நம்மனால புரிஞ்சிக்க முடியாது, அதுனால, அவங்க அத உணர்துரதுக்காக அப்படி செஞ்சிருப்பாங்க. நீ என்ன செஞ்சிருக்கணும், அந்தபக்கம் போகும்போது கவனமா போயிருக்கணும். இல்லைன போகாம இருந்துருக்கணும்."
 
* "அதெப்பிடி.. நீதானே சொன்னே, இந்த பூமியில படைக்கப்பாட்ட ஒவ்வொரு உயிரினத்திற்கும், இந்த பூமி மீதான சகல உரிமையும் எல்லோருக்கும் உண்டுன்னு, பின்ன அங்கே இங்க போகக்கூடாதுன்னு சொல்ற?"


விலங்குகள், அனிமேஷன் படங்கள்,

*  "சகல உரிமையும் எல்லோருக்கும் உண்டுதான், ஆனா அது அடுத்தவங்க உரிமையை பாதிக்காத வகையில இருக்கணும்."
(இது நடந்துகொண்டிருக்கும்போதே ஏறும்புகளனைத்தும் மரமேறி அணில்களின் இருப்பிடம் வந்தடைந்தன.)

 
எறும்பு, எறும்புகள், வேலைசெய்யும் எறும்புகள்
 
 
*  "அம்மா! அம்மா! இவிங்கதான், ஆகா இங்கேயும் வந்துட்டானுகளே! அம்மா, முடிஞ்சா இவனுகள நசுக்கு. இல்லேன தப்பிச்சு ஓட வழிபன்னு. அய்யோ! நெருங்கிட்டானுகளே. கடுமையா வலிக்குமே!"
 
*       "டேய்! இருடா! அவங்க எதோ சொல்ல வந்திருக்காங்க. கொஞ்சம் அமைதியா இரு."

(எறும்புகள் வரிசையாக வந்து சின்டுவின் அம்மாவிடம் ஏதேதோ செய்து காண்பித்தன. அங்கும் இங்குமாக ஓடின கைகளையும் கால்களையும் அசைத்து காண்பித்தன. தனது கண்களை கைகளால் மூடி காண்பித்தன. இன்னும் என்னென்னவோ. இது நீண்ட நேரமாக நீடித்தது. பதிலுக்கு சின்டுவின் அம்மாவும் எதோ சொல்ல (மன்னிக்கவும்) செய்ய, எறும்புகள் விடைபெற்றன. சின்டு பயமும் கோபமும் தணிந்து குழப்பத்துடன் காணப்பட்டான்.)


மகிழ்ச்சி, எறும்புகளின் நடனம், அனிமேஷன்

*       "ஆமா! இங்க இவ்வளவு நேரம் என்ன நடந்துச்சு?"
 
* "டேய்! போடா சும்மா! பாவம்ட அவங்க. நடந்த தவறுக்கு, அவங்க அவுங்க வேலையெல்லாம் விட்டுட்டு வந்து மன்னிப்பு கேட்டாங்க. உங்களைவிட சின்ன உயிரினங்களான எங்கள நீங்க ஆதரிக்கலேன்னா வேற இந்த உலகத்துல எங்களுக்கு நாதி யாரு இருக்காங்கன்னு சொல்லி வருத்தப்படராங்க. அதுமட்டுமில்லாம நீ ரொம்ப வழியால துடிச்சி போய்ட்டியாம். ரொம்ப வருத்தப்பட்டாங்க அப்புறம் நீ ரொம்ப குட்டியா, சின்னதா அழகா இருக்கியாம்." (இதை கேட்டவுடன் மனம் திருந்தி மகிழ்ந்த சின்டு சுதாரித்துக்கொண்டு...)
 
* "ஆமா! அவங்க சொல்றத நம்மனால புரிஞ்சுக்க முடியாதுன்னு சொன்னே, இப்போ சொன்னாங்க சொன்னாங்கன்னு அள்ளிவிடுரே, என்ன உடான்ஸா?"
 
* "அப்படி இல்ல செல்லக்குட்டி, அன்பு இருந்தா எதுவும் சாத்தியம்தான். மத்த உயிரினங்களின் மீது அளவில்லாத அன்பு செலுத்தினா, அவுங்க சொல்லவருவதை நம்மனால எப்படி புரிந்துகொள்ள முடியாமல் போகும்.?"
 
*       "ஓ! அதுனாலதான் நான் பிறந்த உடனே, என்னால வாய் திறந்து பேச முடியாதபோது நான் சொல்லவந்ததை எல்லாம் நீ புரிஞ்சிக்கிட்டியோ?"
 
*       "ஆமா செல்லம். உனக்கு புரியுற மாதிரி சரியான எடுத்துக்காட்ட சொல்லன்னுமின்னா, தாய் பாசம்தான் சரியான எடுத்துக்காட்டு. பரவாயில்லையே, சரியா சிந்திக்கிரியே."
 
*       "இருக்கட்டும் இருக்கட்டும். அதுசரி, அவங்க எதோ மண்ணும் உப்பும் கேட்டதா சொன்னியே அது எதுக்காம்?"
 
*       "அது மண்ணும் உப்பும் இல்லடா, அதுக்குப்பேரு மன்னிப்பு."
 
*       "சரி சரி பப்ளிசிட்டி பண்ணாத. மன்னிப்பா!.. அப்படின்னா?.."
 
* "மன்னிப்புங்க்றது.. அன்பின் வெளிப்பாடு. அதாவது, நமக்கு எதிரா ஒருவர் நடந்துக்கிட்டபோதும், அவர் செஞ்ச தப்பெல்லாத்தையும் மறந்து, அவர மறுபடியும் நம்மகூட சேத்துக்கிட்டு, “நாம ரெண்டு பேரும் அன்பை பரிமாறிக்கொள்ள தயாராகிவிட்டோம்”ன்னு, ஒருத்தொருக்கொருத்தர் உணர்த்திக்கொள்ளும் நிலைக்கு மன்னிப்புன்னு பேரு."
 
*       "அது சரி, “நமக்கு எதிரா” அப்படின்னு சொன்னியே அப்பிடின்னா என்ன?"
 
*  "நம்ம மகிழ்சிய கெடுக்கிற விதத்துல செய்யப்படுற செயல்களை அப்படி சொல்லலாம். எடுத்துக்காட்டுக்கு, தவறு, தப்பு, துரோகம். இதுமாதிரி நிறைய குற்றங்கள சொல்லலாம். அது போக நல்லா யோசிச்சு பார்த்தா, மேல சொன்னதெல்லாம் குற்றங்களே இல்ல. அதுபோக, இந்த “மன்னிப்பு” அப்படிங்கற கோட்பாட்டை வெச்சு பார்க்கும்போது, “குற்றம்” அப்படிங்கற கோட்ப்பாடே இல்ல."
 
*       "என்னம்மா சொல்ற? இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லும்மா."
 
*     "சொல்றேண்டா செல்லம். அதாவது, நமக்கு வேண்டாத, பிடிக்காத, அல்லது நமக்கு எதிரான ஒன்றை ஒருத்தரு செஞ்சிட்டாருன்னா, அது நம்ம பார்வையில தவறுன்னும் அவர் தவறு செஞ்சிட்டாருன்னும் நாம அவர் மீது குத்தம் சுமத்தறோம். மத்தபடி அவரோட உரிமைகளை நாம மதிக்கிறதுமில்ல, அதை கண்டுகிறதுமில்ல. அவரு அத அப்படி செய்ய காரணம் என்னான்னு, யோசிக்கிரதுமில்ல. நம்பளோட உரிமைகள சுதந்திரமாக, நாம நினைச்சதுபோல அனுபவிக்கிறதுக்கு அவரோட உரிமைகள் இடையூறா இருக்குங்கிற, ஆதங்கந்தான் இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை."
 
*     "ஆனா... அவங்களோட உரிமை மத்தவங்கள பாதிக்கிற வகையில இருக்குல்ல, அப்போ அது குற்றம் தானே."
 
சண்டை, குத்துசண்டை, காமெடி
 
*   "இத நீ ஏன் ஒரு குற்றமா எடுத்துக்கிற? அன்பு என்கிற கண்கொண்டு பாக்கும்போது எதுவுமே அழகாத்தான் தெரியும். அப்படியும் அவரு தப்பு செஞ்சவரா உனக்கு தெரிஞ்சாருன்னா, நீ ஏன் அவர திருத்தரதுக்கு முயற்சி பண்ணக்கூடாது?"
 
*       "சரி திருத்துவோம். ஆனா திருத்துரதுக்கான வழி என்னான்னு தெரியலையே!"

*   "அதுக்குத்தான், நம்ம முன்னோர்கள் நிறைய வழிகள காமிச்சிட்டு போயிருக்காங்க. இப்போ திருவள்ளுவர் சொன்ன வழிய பாப்போம்."


இன்ன செய் தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.


"அதாவது, நமக்கு தீமை செஞ்சவன மன்னிப்பது மட்டுமில்ல, அவன் அவனோட தவற உணர்ந்து நாணி வெட்கித்தலைகுனியும் அளவுக்கு அவனுக்கு நன்னயம் (நன்மை) செஞ்சிடு. அப்படின்னு சொல்றார்.இதுல இன்னொன்னும் நாம தெரிஞ்சுக்கணும், நமக்கு தீமை செஞ்ச ஒருத்தருக்கு, நாம கொஞ்சம் முயற்சியெடுத்து, நன்மை செய்யுறோம். இது ஒருபக்கம் இருக்கும்போது, நாம எந்தவித நன்மையையும் செய்யாதபோதும், அவங்களாவே, அவங்க தப்ப உணர்ந்து, நம்ம உறவு வேனுங்க்றதுக்காக, நம்மகிட்ட மன்னிப்பு கேட்டு பரிதாபமா நிக்கும்போது, நாம மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு உர்ர்ர்ருன்னு இருக்கிறது, ரொம்ப கொடுமை. வெ.இறையன்பு சொல்றதபோல.."


கெட்டவன் திருந்திட்டான்னா, அவனைவிட நல்லவன் யாருமில்ல.
பொய் சொல்றவன் திருந்திட்டான்னா, அவனோட வார்தைகள விட வேற வேத வார்த்தைகள் இல்ல.
திருடன் திருந்திட்டான்னா, அவனைவிட உத்தமன் யாருமில்ல.
      அதனால, ஒருத்தன் திருந்தி வரும்போது, அவன ஏத்துக்கிறதுதான் எல்லோருக்கும் நல்லது. 


மன்னிப்பு, மன்னிப்பு கேட்டல், தவறு செய்து திருந்துதல்

*       "சொல்றதெல்லாம் சரிதான். ஆனா சிலபேரு, எத்தனதடவ மன்னிச்சு விட்டாலும் அப்போ மட்டும் நல்லவனா நடிச்சிட்டு, மறுபடியும் மறுபடியும், விடாம தப்பு செய்ரவங்கள எப்படி திருத்துறது?"
 
*     "இருக்கலாம்... நான் முன்னமே சொன்ன மாதிரி அது அவங்க உரிமை சம்பத்தப்பட்டது. அது தொடர்ச்சியான குற்றமா நம்மகண்ணுல படும்போது, அத மாத்துறதுக்கு நாம முயற்சி பண்ணலாம். “நீ எத்தன தடவ திரும்ப திரும்ப தப்பு பண்ணினாலும் நான் உன்ன மன்னிச்சுகிட்டே இருப்பேன்”னு நீ உன் வைராக்கியத்த அன்பு செலுத்துரதுல. அவன்கிட்ட, உனக்கு பிடிக்காத விஷயங்கள விட்டுட்டு, அவன்கிட்ட கண்டிப்பா ஒரு நல்ல விஷயமாவது இருக்கும். நீ அந்த நல்ல விஷயங்கள மட்டும் பாரு. காட்டு. பகைமையை மனசுல வெச்சுக்கிட்டா மன அழுத்தந்தான் மிஞ்சும். வாழ்க்கையே நரகம் மாதிரி இருக்கும். கொஞ்சம் அன்போட அவன பாரு. அவன் மட்டுமில்ல உலகத்துல இருக்கிற எல்லாமே அழகா தெரியும். அன்னை தெரசா சொன்னது போல.. தப்புசெய்றது அணில்களோட இயல்புன்னா, அத மன்னிக்கிறது கடவுளோட இயல்பாம். நீ மன்னிச்சு கடவுள் ரேஞ்சுக்கேல்லாம் ஆசைப்பட வேணாம். மன்னிச்சு மனிதனாக இருக்க முயற்சிக்கலாமே!"


"மத்தவங்க உணர்வுகள மதிச்சு நடக்கிறதுதான் இந்த உலகத்துக்கான அமைதி நிலையின் தொடக்கம். இந்த உலகத்துல நமக்கு முன்னாடி பலகோடிபேரு வாழ்ந்துட்டு போயிருக்காங்க. நமக்கு பின்னாடியும் பலகோடிபேரு வாழப்போறாங்க. நாம்மளோட இந்த உலகம் முடிஞ்சிரபோரதில்ல. நமக்கு பின்னாடியும் இந்த உலகம் இருக்கும். இந்த உலகத்தோட ஆயுசு ரொம்ப பெருசு. அதுல நம்ம ஆயுச ஒப்பிட்டுப்பார்த்தா, ஒரு மண்ணு அளவ விட சின்னதாதான் இருக்கும். நாம இந்த பூமில வாழ்ற கொஞ்ச நாட்க்கள நாம மகிழ்ச்சியா வெச்சுக்கிறதுக்கு எது துணைய இருக்குதுன்னு  பார்த்தா, அது நம்மாளோட உறவுகள்தான். ஒரு அணிலோட மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும், அது அந்த அணில சுத்தி இருக்கிற உறவுகள பொறுத்துதான் இருக்கு. அப்படிப்பட்ட உறவுகள, நாம எந்த அளவுக்கு, அவங்களோட உணர்வுகள புரிஞ்சிக்கிட்டு, அன்பு செலுத்தி, அவங்க செய்யற தவறுகள மன்னிச்சு ஏத்துகிறமோ, அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கைல மகிழ்ச்சி இருக்கும். மத்தவங்க மேல அன்பு செலுத்திப்பாரு, எல்லோரும் நல்லவங்கன்னு உண்மையை புரிஞ்சுக்குவ. மத்த உயிரினங்களின் மேலயும் அன்பு செலுத்திப்பாரு, உலகம் எவ்வளவு அழகுன்னு வியந்து வியந்து ரசிப்பே. இப்போ சொல்லு, அன்பை வெளிப்படுத்துற விதமா, எல்லோரையும் மன்னிச்சா, உறவுகள் எப்படி நரகமா மாறும்? உலகம் எப்படி உனக்கு அழகா தெரியாம போகும்?.."



சிந்தனையில் கரைந்த சில மனித்துளிகளுக்குப்பிறகு..........

*       "உங்களுக்கு அழகே! பூவோட மொட்டு மாதிரி இருக்கிற, உங்க தலையும், கொடுக்கும்தான்."
 
*       "அப்புறம்?"
 
*       "அப்புறம் காணாமல்போன இடுப்பு, மண்ணு நோகாம நடக்குற கால்கள், இதெல்லாம்தான்."
 
*       "ரொம்ப புகழாத, மா நீங்கெல்லாம் ஏன் உங்களுக்கு பின்னால எதையோ கட்டி, எந்நேரமும் இழுத்துட்டே.. திரியுறீங்க?"
 
*       "சீ....... அது எங்களோட வாலாக்கும்."

தூரத்தில் எறும்புகளின் குரலும், சின்டுவின் குரலும் மாறி மாறி, ஒலித்துக்கொண்டிருக்க, சின்டுவின் அம்மா, “என்ன உடான்ஸா?” என்ற சின்டுவின் கேள்வியை அசைபோட்டுக்கொண்டே..உரையாடலை ரசித்துக் கொண்டிருந்தார்.


                                                       வே.சுப்ரமணியன்.

4 comments:

  1. ஹா..ஹா..ஹா.. நகைச்சுவையாக நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். குழந்தைகளையும் இதனை படிக்க சொல்ல வேண்டும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துக்களை பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. மிக மிக அருமையாக சொல்லவேண்டியதை
    எளிமையாக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @Ramani தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்து பதிவுகளுக்கும் எனது மனம் திறந்த நன்றி அய்யா!

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!