Navigation Menu

தேடல்

           தேடல் என்பதுதான் மனித சமூகத்திற்கு மட்டுமல்லாது இவ்வுலகில் உள்ள அணைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை. தேடல் என்கிற ஒன்று இல்லை எனில் மாற்றம் என்பது இருக்காது. எதையும் தேடுகிறபோதுதான் புதிதாக ஒன்றை கண்டடடைய முடியும். புதிது புதிதாக கண்டடையும் ஒவ்வொன்றும்தான் மாற்றம் என்பதற்க்கான அனுமதி சீட்டு. மாறும் உலகில் மாறாத ஒன்று “மாற்றம்” மட்டும்தான், என்கிற தத்துவம் கூட தேடல் என்கிற அடிப்படை செயல் இல்லையெனில் தோற்றுப்போகும். அப்படிப்பட்ட தேடலை நாம் எந்த நோக்கத்தை கொண்டு செய்துகொண்டிருக்கிறோம்? எந்த இடத்தில் தேடுகிறோம்? நமக்கு மட்டுமல்லாது, நாம் சார்ந்திருக்கிற, நம்மை சார்ந்திருக்கிற சமூகத்திற்கு அது எந்த வகையில் மேம்பாடு அடையச்செய்யும்? என்ற கேள்விகளுக்கு சரியாக சிந்தித்து பதிலை தேடி கண்டுபிடித்துவிட்டாலே நிச்சயம் அந்த தேடல் ஒட்டு மொத்த உலக மேன்மையை செய்துகொண்டிருக்கும். ஆக, தேடும்பொருள், தேடப்படும்பொருள் ஆகிய இரண்டு முக்கிய இரு காரணிகளே தேடலின் தன்மையை நிர்ணயித்து விடுகின்றன. இந்த இரண்டிற்கும் இடையில் சமுதாயம் செய்வதெல்லாம் தேடப்படும் பொருளின் வாய்ப்புகளை கான்பித்துக்கொண்டிருப்பதுதான்.
          சரி, தற்போது நாம் எந்த வகையான தேடலை கொண்டிருக்கிறோம் என்று பார்த்தோமானால், இருக்கின்ற பொருளை வைத்திருந்த இடத்தில்தான் தேடுவோம். அல்லது இருக்கும் ஒரு பொருளை அடைவதற்கான வழிகளை தேடுவோம். இது சற்று மேம்பட்டதாக இருந்தாலும் கூட சில நேரங்களில் சுயநலத்திற்க்காக மட்டுமாகவே இருக்கலாம்.(தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைத்துக்கொண்டிருந்தாலும், அது கடமையாக இருந்தாலும் கூட சமூக சிந்தனையற்ற கடமை சுயநலமானதாகும்)

இந்த கட்டுரை சொல்வதெல்லாம் இல்லாத ஒன்றை தேடுவதைத்தான். இல்லாத ஒன்றை எப்படி தேடுவது? அது எப்படி சாத்தியம்? இல்லாத ஒன்றை தேடுவதற்கு முன், எது இல்லை? என்று தேடுவதும் ஒரு மேம்பட்ட தேடல்தான்.

 அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தான் தொலைபேசியை கண்டுபிடிக்கப்போகும் சில காலங்களுக்கு முன்பு. நான் இந்த இடத்தில் வைத்திருந்த தொலைபேசியை எங்கே காணோம் என்று தேடிக்கொண்டிருக்கவில்லை.

இலக்கிய தேடலில் முளுமையடைந்ததால்தான் திருக்குறள். 

திருக்குறள்,திருவள்ளுவர், தேடல்,தமிழ் இலக்கியம்
      அமைதியையும் அன்பையும் ஒரு அட்டைப்பெட்டிக்குள் வைத்து கட்டி வைத்திருந்தேனே எங்கே அது? என்று அன்னை தெரசா தேடிக்கொண்டிருக்கவில்லை.

      சித்தார்த்தர், அரசமரத்தடியின் கோணிப்பையில்தான் ஞானம் கட்டப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, என்று தேடிக்கொண்டிருக்கவில்லை. அப்படி தேடியிருந்தால் போதிமரமும் முளைதிருக்காது, புத்தரும் பிறந்திருக்க மாட்டார்.

      இவர்கள் “இருந்ததை” தேடவில்லை. “இருக்கவைக்க” தேடினார்கள். இவர்கள், தாங்கள் தேடிப்பெற்றதை தாங்கள் அனுபவிக்க தேடவில்லை. தாங்கள் இல்லாத எதிர்கால சமுதாயம் அனுபவிக்கட்டும் என்றுதான் தேடினார்கள்.

     நினைத்துப்பாருங்கள், நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பொருளும் நாம் தேடி கண்டிபிடித்ததில்லை. பிறரால் அல்லது நமது முன்னோர்களால் கொடுக்கப்பட்டதையே நோகாமல் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். சுற்றியும் பாருங்கள். நீங்கள் உபயோகிக்கும் எந்தப்பொருளாவது உங்களால் கண்டுபிடிக்கப்பட்டதா? கைபேசியிலிருந்து கணினிவரை, கலப்பையிலிருந்து கால்சட்டை வரை பிறரது தேடல்களின் தொடக்கத்தையே பயன்படுத்துகிறோம்.

இதோ ஒரு உன்னதமானவனின் தேடல்.....
அப்துல்கலாம், தேடல், அமைதியைத் தேடி, தண்ணீர்ப்பந்தல்
அமைதியைத் தேடி:
        சுமூகமானமேடு பள்ளம் இல்லாத, அமைதியானமகிழ்சியான, ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது என்னுடைய தேடல். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
                                 ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.

      வாருங்கள் நண்பர்களே! நமது சிந்தனையை கொஞ்சம் சரியான தேடலை நோக்கி திசை திருப்புவோம். இந்த உலகம் செய்து வைத்திருந்ததை அனுபவித்துவிட்டு செல்லும் சாதாரண மனிதனாக மரித்துப்போக வேண்டாம். நன்றி கடனாக இந்த உலகிற்க்கு எதையாவது தேடி கொடுத்துவிட்டுப்போவோம். தற்ப்போது இந்த உலகிற்கு தேவை அமைதி, அன்பு, இலக்கியம், அறிவியல் என நிறைய இருக்கிறது. இவற்றை கொடுக்க நம்மால் முடியும். அதற்காக தற்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் நமது தேடலை சரியான திசையை நோக்கி திருப்பவேண்டியதுதான்.

பாரதிதாசன், புதியதோர் உலகுசெய்வோம்,தமிழ் இலக்கியம்
வாருங்கள் நண்பர்களே! “புதியதோர் உலகு செய்வோம்” என்று சொல்லிவிட்டு, உறங்கிக்கிகொண்டிருக்கும் ஒருவனின் கனவை, அவனது உறக்கத்தை கலைத்து விடாமலேயே நனவாக்குவோம்.
                                                         வே.சுப்ரமணியன்.   
                            

4 comments:

  1. மிகப்பெரும் தமிழ் இலக்கிய ஆய்வாளரும், இலக்கிய வலைபதிவருமான தாங்கள் என்னைப்போன்ற அறிமுக வலைபதிவர்களை தங்கள் மேம்பட்ட கருத்துரைகள் மூலம் ஊக்கப்படுத்தும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. தேடலின் விளைவால் வந்ததுதானே இக்கட்டுரையும்... நல்லதொரு கருத்து செறிவுமிக்க கட்டுரை..! இதன் தொடர்ச்சியையும் வெளியிடலாமே..!

    ReplyDelete
    Replies
    1. //தேடலின் விளைவால் வந்ததுதானே இக்கட்டுரையும்... // மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே! தங்களது ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி நண்பரே! விரைவிலேயே இதன் தொடர்ச்சியையும் பாகம் இரண்டாக வெளியிடுகிறேன் நண்பரே!தங்களது அன்புக்கு மிக்க நன்றி!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!